சனி, 26 செப்டம்பர், 2020

எஸ்.பி.பிக்கு காவல் துறை மரியாதை: முதல்வர் அறிவிப்பு!

எஸ்.பி.பிக்கு காவல் துறை மரியாதை: முதல்வர் அறிவிப்பு!minnambalm :எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு காவல் துறை மரியாதை அளிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.  40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இசை உலகின் சகாப்தமாக விளங்கும் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நலக் குறைவால் இன்று (செப்டம்பர் 25) காலமானார். அவரது உடல் நுங்கம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் திரையுலகினர், பொதும

க்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதன்பிறகு தாமரைப்பாக்கத்திலுள்ள பண்ணை வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதியில்லை.எஸ்.பி.பி மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்தனர். எஸ்.பி.பிக்கு இறுதிப் பயணம் முழு அரசு மரியாதையுடன் நடைபெறத் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அன்னாருக்கு காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” என்ற தகவலைத் தெரிவித்துள்ளார்.

எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக