சனி, 5 செப்டம்பர், 2020

மாக்சிஸ்ட் எம்பி ரங்கராஜனின் இரட்டை விஷம்

 பார்ப்பனர்கள் மற்றும் உயர்சாதியினருக்கான 10 வீத இடஒதுக்கீட்டுக்கு ராஜ்யசபாவில் வாக்களித்த மாக்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்பி ரங்கராஜன் (பார்ப்பனர்) தமிழ்நாட்டில் இருந்து தெரிவானவராகும்.

ஒருநீண்ட வரலாற்றை கொண்ட கம்யூனிஸ்டு கட்சியின் ஒரு எம்பி இந்த பச்சை துரோகத்தை செய்துவிட்டு ஒன்றுமே நடக்காத மாதிரி எப்படி அரசியல் செய்ய இவர்களால் முடிகிறது ?

ஏதோதோ பிரச்சனைகள் பற்றி எல்லாம் நீட்டி முழங்கி வகுப்பெடுக்கும் இடதுசாரிகள் இந்த துரோகத்தை முழு சோற்றுக்குள்  பூசணிக்காயை மறைப்பது போல மறைத்து மறந்தும் விட்டார்கள் .

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கலைஞர் மீதும் திமுக மீதும் தர்ம நியாயங்கள் எல்லாம் பேசும் இடது சாரிகள் இது பற்றி பொது மன்னிப்பாவது கேட்கவேண்டும் . 

அரசியலில் சோரம் போதல் என்பதற்கு அசல் உதாரணம் இதுதான். 

ஆர் எஸ் எஸ் இன்  அத்தனை திட்டங்களும் பார்ப்பனர் நலம் கருதியே இருக்கும் என்பது மக்கள் ஊரறிந்த உண்மை . ஆனால் ஆர் எஸ் எஸ் இன்  நோக்கங்கள் நிறைவேற நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து வேலை பார்த்து வருவது இந்திய கம்யூனிஸ்ட்டுகள்தான் .   தீஸிஸ் திருடன் ராதாகிருஷ்ணன் நமது 

 ஏராளமான அப்பாவி தொண்டர்கள் இன்னும் இவர்களை நம்பி தங்கள் சக்தியையும் காலத்தையும் வீணாக்குகிறார்கள் என்பதுதான் இதில் உள்ள சோகம்.

அடிப்படை நோக்கம் மட்டும் நல்லதாக இருந்தால் போதாது .

 நீங்கள் சார்ந்திருக்கும் கட்சி அல்லது இயக்கம் பற்றிய உண்மையான புரிதல் இருக்க வேண்டும் இல்லையேல் அனைத்து வீணாகி விடும். 

இல்லையேல் ரங்காராஜன்களின் உல்லாச வாழ்க்கைக்காக அப்பாவிகள் மாய வேண்டி இருக்கும் 

எல்லா அக்கிரமங்களை செய்துவிட்டு இன்று ஒன்றும் தெரியாத பாப்பாவாக பாஜகவுக்கு எதிராக இருக்கிறாராம் . சொல்கிறார் ரங்கராஜ பார்ப்பனர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக