சனி, 5 செப்டம்பர், 2020

மதுரையில் உள்ள எச்.டி.எப்.சி வங்கி.. வாடிக்கையாளர்களை கொள்ளை அடிக்கும் ...

Suresh Selvam : சட்டப்படியான நவீன கொள்ளையர்கள் !

வீட்டுக்கடன் வாங்கிய மருத்துவர் : சார் நான் உங்க கிட்ட எப்போ லோன் வாங்கினேன்?

ஹெச்.டி.எப்.சி HDFC Bank HDFC Home Loans

வங்கியின் மேலாளர்: 2006 இல்

ம : எவ்வளவு லோன் வாங்கினேன்

மே: ரூ. 51 லட்சம்

ம: மாசம் எவ்வளவு தவணை செலுத்தி வரேன்?

மே: 57 ஆயிரத்து சொச்சம் சார்.

ம: இதுவரை எவ்வளவு கட்டியிருக்கேன்?

மே: ரூ.94 லட்சம்

ம: அசல் எவ்வளவு குறைந்திருக்கு?

மே: ரூ.14 லட்சம்

ம: அப்போ வட்டி மட்டும் எவ்வளவு கட்டியிருக்கேன்?

மே: ரூ. 80 லட்சம்

ம: வட்டி விகிதம் என்ன?

மே: 14.75%

ம: வட்டியைத்தான் ரிசர்வ் வங்கி குறைச்சிடுச்சே.

மே: ஆனா, வட்டியை குறைக்க சொல்லி நீங்க விண்ணப்பம் செய்யலயே?

ம: இது தப்பில்லையா?

மே: சட்டப்படி தப்பில்ல. நீதிமன்றம் போனா கூட இந்த விபரங்களெல்லாம் பொது தளத்திலேயே இருக்கு, எனவே விண்ணப்பம் செய்யாதது உங்கள் குற்றம் என்றுதான் சொல்லுவாங்க.

ம: உங்க வங்கியில இருந்து 100 பேர் கடன் வாங்கிக்கிறீங்களானு வந்து கேட்டாங்க. ஆனால் யாருமே வட்டி விகிதம் குறைஞ்சிருக்கு விண்ணப்பம் கொடுங்கணு சொல்லலயே?

மே: நீங்க கேட்டா சொல்லியிருப்பாங்க.

ம: அப்படி குறைத்திருந்தால் இப்போ எனக்கு எவ்வளவு கடன் இருக்கும்?

மே: உங்க கடன் முழுவதும் முடிந்திருக்கும்.

ம: அப்போ நான் கேட்கவில்லை என்கிற ஒரே காரணத்துக்காக, இன்னும் ரூ.37 லட்சம் அசலும் அதற்கான வட்டியும் கட்டணுமா?

மேலாளர்: ஆமா, அதை தவிர வேற வழியில்லை.

இது மதுரையில் உள்ள எச்.டி.எப்.சி வங்கியின் மேலாளருக்கும், அங்கு கடன் வாங்கிய ஒரு மருத்துவருக்கும் இடையே நடந்திருக்கும் உரையாடல். ரிசர்வ் வங்கி, வட்டிக் குறைப்புச் செய்தாலும், அதை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றும் வங்கிகளின் உரிமையாளர்களையும், இதை கண்காணிக்காத அரசு அதிகாரிகளையும் சிறையிலடைக்க வேண்டாமா?

இப்படி ஏமாற்றிய வங்கிகளிடம் இருந்து அவர்களுக்கு கொடுத்த வட்டிக் குறைப்பை ரிசர்வ் வங்கி வட்டியோடும், அபராத வட்டியோடும் திரும்பப் பெற்றிட வேண்டாமா?

ரிசர்வ் வங்கியின் பணம் என்பது மக்கள் பணம் இல்லையா?

தோழர் கனகராஜ் கருப்பையா    வாடிக்கையாளர்களை  கொள்ளை அடிக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக