திங்கள், 21 செப்டம்பர், 2020

உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் !!

நல்லெண்ணெய் ஆரோக்கியம் அளிப்பதில் நல்ல எண்ணெய் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. செசாமின் என்னும் பொருள் நல்லெண்ணெயில் இருக்கிறது. 

 மேலும் வைட்டமின் ஈ, கொழுப்பைக் குறைக்கும் லெக்சிதன் என்னும் பொருளும் இதில் அடங்கியிருக்கிறது. உடலில் சேரும் அதிகப்படியான கெட்டகொழுப்பைக் குறைக்கிறது. இரத்தக் குழாய்களிலும் கொழுப்பை சேரவிடாமல் தடுத்து, இதய நோய்கள் நம்மை நெருங்குவதை தடுக்கும் அபரிமிதமான சக்தியாக நல்லெண்ணெய் செயல்படுகிறது. 

உடலில் இருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் ரத்த ஓட்டம் சீராகவும், சரியான விகிதத்திலும் சென்றால் மட்டுமே நமது உடலும், மனமும் சுறுசுறுப்பாக இயங்கும். நல்லெண்ணெயில் அதீத செம்புச் சத்து மற்றும் ஜிங்க் சத்துக்கள் இருக்கின்றன. இதயம் ஆரோக்கியமாக இருக்கவும், இதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும் ஒரு சிறந்த உணவுப் பொருளாக நல்லெண்ணெய் இருக்கிறது."

இளமையும், தோற்றப்பொலிவும் நீடித்து நிற்க நல்லெண்ணெய் பெரிதும் துணை புரிகிறது. மன உளைச்சல், கவலை, பதற்றம் போன்றவற்றை அதிகரிக்கக்கூடிய ஹார்மோன் சுரப்புகளைத் தடைசெய்யும் பைரோ ரெஸினால் என்னும் அமிலப் பொருளை உள்ளடக்கியிருக்கிறது.  

உடலுக்கு நல்லெண்ணெய் சேரும்போது உடலில் இருக்கும் கால்சியம், பாஸ்பரஸ் உப்புகள் எளிதில் செரிமானம் ஆக துணைபுரிகிறது. இப்படியெல்லாம் ஆரோக்யத்தைத்தேடி போகாமல் வாழ்ந்து வந்தவர்கள் நம் முன்னோர்கள்.;">நமது உடலை காக்கும் கவசமாக வெளிப்புற தோல் இருக்கிறது. வெளிப்புற தோலுக்கு மிகுந்த நன்மை பயக்கும் ஒரு எண்ணெய் வகையாக நல்லெண்ணெய்  இருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக