சனி, 12 செப்டம்பர், 2020

ஸ்டாலின் : மாணவர்களே.. தைரியமாக இருங்கள்.. திமுக ஆட்சியில் நீட்டை ரத்து செய்வோம்..

 tamil.oneindia.com- Shyamsundar சென்னை: மாணவர்களே, தைரியமாக இருங்கள், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்.. 8 மாதம் பொறுத்திருங்கள்.. திமுக ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருக்கிறார். 

நீட் தேர்வு எழுத தயாராகி வந்த மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா, தேர்வு அச்சம் காரணமாக இன்று தற்கொலை செய்து கொண்டார்.உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் இவர் பதிவு செய்த ஆடியோவும் வெளியாகி உள்ளது. இவர் மரணம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. இந்த நிலையில் ஜோதி ஸ்ரீதுர்கா மரணம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் டிவிட் செய்து இருக்கிறார். 

ஸ்டாலின் தனது டிவிட்டில் அனிதா தொடங்கி ஜோதி ஸ்ரீதுர்கா வரை - அஞ்சலி செலுத்துவதோடு எல்லாமும் முடிந்துவிடுகிறதா? அவர்கள் நம் வீட்டு குழந்தைகள் இல்லையா? பயமா இருக்கு என்று எழுதிவைத்து இறந்து இருக்கிறார் ஜோதிஸ்ரீ துர்கா. அடக்குமுறைகளையும், அநீதிகளையும் எதிர்த்து திமிறி எழும் இனம் நம் தமிழ் இனம் அந்தக் குணம் மாணவர்களுக்கும் அவசியம். 

 போராடினால்தான் வெற்றி என்றால் போராடுவோம். எதிர்த்தால்தான் கதவு திறக்கும் என்றால் எதிர்த்து நிற்போம். தைரியமாக இருங்கள். உங்களுக்காக போராட நாங்கள் இருக்கிறோம். திமுக இருக்கிறது. நான் இருக்கிறேன். திமுக ஆட்சி அமையும் போது கண்டிப்பாக  நீட் ரத்து செய்யப்படும். வாய்ப்பு வழங்கப்படும் வாய்ப்பு வழங்கப்படும் 

நீட் தேர்வினால் வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத்தேர்வு அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு உருவாக்கப்படும். எந்தப் போராட்டத்தையும் திமுக அரசு மேற்கொள்ளும்,சட்ட போராட்டத்தையும், ஆட்சி போராட்டத்தையும் நாங்கள் மேற்கொள்வோம். இது உறுதி! நீட் தேர்வை திமுக நீக்குவது உறுதி. மாணவர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். உறுதியாக இருக்க வேண்டும். எட்டு மாதங்கள் பொறுத்திருங்கள், கலங்காதிருங்கள் விடியல் பிறக்கும்.. என்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டில் குறிப்பிட்டு உள்ளார்.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக