சனி, 12 செப்டம்பர், 2020

நீட் தேர்வு: தருமபுரியை சேர்ந்த மாணவர் ஆதித்யா தற்கொலை BBC

நீட் தேர்வு அச்சம் காரணமாக தருமபுரியை சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இலக்கியம்பட்டி பகுதியை சேர்ந்த மணிவண்ணன் மற்றும் சித்ரா தம்பதியினரின் மகனான 20 வயதுடைய ஆதித்யா, நீட் ஆதித்யாதேர்வுக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார். நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற இருக்கும் நேரத்தில், இந்த வாரத்தில் மட்டும் தமிழகத்தில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஏற்கனவே இதே காரணத்தால் மதுரையை சேர்ந்த ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி இன்று காலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கடந்த வாரம் அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்குத் தயாராகிவந்த மாணவர் ஒருவர் கிணற்றில் குதித்துத் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்தது.

ஜோதி ஸ்ரீதுர்கா மரணம்

மருத்துவ படிப்பிற்கான கட்டாய நுழைவு தேர்வான நீட் தேர்வில் மருத்துவ சீட் கிடைக்காவிட்டால் குடும்பத்தார் ஏமாற்றம் அடைவார்கள் என்ற அச்சத்தால் மதுரையைச் சேர்ந்த ஜோதி துர்கா இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்

அந்த மாணவி சாகும் முன் தனது பெற்றோருக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதியதாக கூறப்படுகிறது.

அந்த கடிதமானது சமூக ஊடகங்களிலும் அதிகமாக பகிரப்பட்டது.

அதில், தன் மீது தனது குடும்பம் அதிக நம்பிக்கை வைத்திருந்ததாகவும், தனக்கு கல்லூரி சீட் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும் என்பதால் தற்கொலை முடிவை எடுத்ததாக அந்த மாணவி எழுதியிருந்தார்.

இறுதியில் "I am sorry. Am tired" என்று கூறி முடித்து இருந்தார்.

அந்த அதிர்ச்சியில் இருந்தே பலர் மீளாத நிலையில், தற்போது ஆதித்யாவின் மரணம் பலருக்கும் துயர செய்தியாக வந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக