சனி, 12 செப்டம்பர், 2020

சீமான் யார்? வந்தேறி, கற்பழிப்பேன், கொல்லுவேன், வடுக வந்தேறி, வேசி மகன்கள்

Thangaraj Gandhi : · சீமானின் பேச்சை நான் இரண்டு தளங்களில் முழுமையாக பார்த்திருக்கிறேன். .. அவரின் உடல் மொழி சிலவற்றை சொல்லும்.
மேடைப்பேச்சு. அது ஒரு அருவியாக ஓடும். ஒரு தன்னம்பிக்கை வார்த்தை சொல்லுவார்கள்,..... 1.உரையாடலுக்கான உரையை கேட்பவர் எல்லாம் அறிவாளிகள் என நினைத்து உருவாக்கு,

2..பேசும் போது முன்னால் இருப்பவர்கள் எல்லாரும் முட்டாள்கள் என நினைத்து பேசு என்பார்கள். ..

சீமான் முதல் விசயத்தை செய்கிறாரோ இல்லையே இரண்டாம் விசயத்தை நிச்சயம் செய்வார்.

பிரபாகரன் இடத்தில் மட்டும் சீமான் இருந்திருந்தால் என்றால் கைதட்டுவார்கள்.....நா அப்ப ஒல்லியா கருப்பா இருப்பேன். என்னைய பெரிய பயில்வான்கள் கூட மோதுவிடுவானுக என மான்கராத்தே கதையை ரீமேக் செய்து சொன்னாலும் கைதட்டுவார்கள்....சிவாஜியப்பா நடித்த முடித்ததும் இவர் முகம் பார்த்து ஒகே என்றவுடன் தான் அவருக்கு திருப்தி என்றாலும் கைதட்டுவார்கள்.....அது சரி... அண்ணனுக்கு ஏற்ற தம்பிகள்.

ஆனால் ஒரு வித்தியாசம்...

இந்த மேடைப்பேச்சில் அவர் மூக்கை நோக்க மாண்டார், அது வந்து அதுவந்து என திரும்ப திரும்ப சொல்லமாட்டார். இங்க தான் ஒன்ன புரிஞ்சுகணும் என சொல்லமாட்டார். ஏனெனில் இது யாரோ அவருக்கு சொல்லிய அல்லது நாம் திண்ணைகளில் பேசும் பேச்சை கொஞ்சம் உரக்க பேசுவார். சும்மா அடிச்சு விடுவார்.ஏனென்றால் கேட்பது எல்லாம் யார் ? தம்பிகள் தானே... அதனால் அடிச்சு விடுவார். இது முதல்வகை சீமான்

இன்னொரு சீமான்...
.ஊடகங்களின் அறைகளில் அந்த ஷோபாவில் தன்னை திணிந்துகொண்டிருக்கும் சீமான். இந்த சீமான் ரொம்ப கத்த மாட்டார். மூக்கை அடிக்கடி ரொம்பவே நோண்டுவார். அது வந்து தம்பி என பத்து தடவையாவது ஒரு நிமிடத்திற்குள் சொல்லுவார். ஒன்ன புரிஞ்சுகிடனும் தம்பி என போலியாக சிரிப்பார். காரணம் இங்கே எதிர் கேள்விக்கு வாய்ப்புண்டு. ஆகையால் கொஞ்சம் அடக்கி வாசிப்பார். முகத்தில் கொஞ்சம் எல்லாம் தெரிந்தவன் என்ற ஒரு நாடகத்தன்மை தெரியும்..... கச்சத்தீவை எப்படி மீட்பீர்கள் என்ற கேள்விக்கு அவர் பம்முவார் பாருங்கள்... மேடையில் பேசும் போது ஐம்பதினாயிரம் பட்டாலியன கொண்டு வந்து நிறுத்துவேன் என்றவர் ஊடகப்பேட்டியில் மத்தியரசுக்கு அழுத்தம் கொடுப்பேன் என பம்முவார். கூடவே அந்த கேவலமான உடல்மொழி . இது #2ம் #தர சீமான்.

மூன்றாவது ஒரு சீமான் இருக்கிறார். மூக்கை நோண்டவில்லை. ஓங்கி கத்தவில்லை. எங்கெங்கோ பார்த்துக்கொண்டு அது வந்து அதுவந்து என்ன சொல்ல... என்னத்த சொல்ல என பம்மும் சீமான். உலக அரசியலை கரைத்துகுடித்தவர் பேஸ்புக்கில் பதில் சொல்லவில்லை, லைக் போடவில்லை, அதான் வெளியேற்றம் என சொல்கிறார். இறுதியாக என்னை கொல்லப்பார்க்கிறார்கள் என முடிக்கிறார். ..

பேஸ்புக்ல லைக்போடல, சரியா ரிப்ளை செய்யவில்லை என்பதெல்லாம் எப்படி துரோகத்தில் வரும்.

அங்கே கல்யாண சுந்தரம் நான் ஒரு ரகசியத்தை சொன்னால் கட்சி சிதைந்து போகும் அதனால் நான் சொல்லமாட்டேன் என்கிறார். அதனால் அவர் என் மீது கோபமாய் இருக்கலாம் என்கிறார். எனக்கு கோபமில்லை. வருத்தம் தான் என்கிறார். கூடவே ரகசியம் சொல்ல மாட்டேன் என சிக்னல் கொடுக்கிறார். வடிவேல் ஒரு படத்தில் சொல்லுவார், “ பால் பொங்கும். பச்ச தண்ணி எப்படிடா பொங்கும் “ அதுதான் எனக்கு நியாபகம் வருகிறது. பத்து ஆண்டுகளாக மேடையில் வந்தேறி, கற்பழிப்பேன், கொல்லுவேன், வடுக வந்தேறி, வேசி மகன்கள் என பேசிவிட்டு முகநூலில் அதைவிட கேவலமாய் தம்பிகளை பேசவிட்டு, அவங்க அண்ணனே தம்பியளா கொஞ்சம் பார்த்து பேசுங்க இது பெரிய காண்டிரக்டா என சொல்லுமளவு கேவலமாய் எழுதிவிட்டு இப்போது சீமானும் தம்பிகளும் நாகரிகம் பற்றி சோகமாய் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

எனக்கென்னமோ நான்காவது  வகையான சினிமாவில் பார்த்த நடிப்பே வராத சீமான் கொஞ்சம் பெட்டர். மேற் சொன்ன சீமான்களை விட...

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மிஸ்டர் சைமன் ...

சீமான் என்பவர் யார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக