ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

மைக்கேல் ஜாக்சனின் உலக அதிசயங்கள். த்ரில்லர், ஆஃப் தி வால், பேட், டேஞ்சரஸ், ப்ளட் ஆன் தி டான்ஸ் ஃபுளோர், இன்வின்சிபிள், ஹிஸ்ட்ரி

 K
ulashekar T
: மைக்கேல் ஜாக்சன் !       இவர் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர். பிறப்பால் கறுப்பினத்தை சேர்ந்தவர். தோற்றத்தில் கறுப்பர். இவர் தன்னுடைய முப்பது வயதிற்குள் உலகின் அத்தனை சாதனைகளையும் செய்து காட்டியவர். தன்னுடைய 29 வயதில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 191 பாடல்கள் மட்டுமே எழுதியிருந்த நிலையில் நாசியில் புறப்பட்ட அறியப்படாத கேன்சர் நோயினால் மரித்துப்போனார். அவர் திரைப்படத் துறையில் பணியாற்றியது கிட்டத்தட்ட 10 வருடங்கள் மட்டுமே. அப்போது அவரை பற்றி கவியரசர் கண்ணதாசன் குறிப்பிடுகையில் சந்தேகமில்லாமல் என்னை விட சிறந்த, தமிழ் பாடல் உலகின் முதன்மையான ஆளுமையை நாம் பறிகொடுத்துவிட்டோம் என்று மனம் கலங்கினார் அப்படியான ஒரு ஆளுமை தான் மைக்கேல் ஜாக்சன். பாப் இசையின் அரசன். அவர் 1958-ல் பிறந்தார். இருபது வயதில் பாப் பாடகராக அறிமுகமாகிவிட்டார். முப்பது வயதிற்கு பிறகு அவர் பணியாற்றவில்லை. இடைப்பட்ட 10 வருடத்திற்குள் தான் இவரும் அந்த இமாலய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். 

உலக அதிசயங்கள் என்று சொல்லத்தக்க வகையில் அவர் ஏழு ஆல்பங்கள் தான் உருவாக்கியிருக்கிறார். த்ரில்லர், ஆஃப் தி வால், பேட், டேஞ்சரஸ், ப்ளட் ஆன் தி டான்ஸ் ஃபுளோர், இன்வின்சிபிள், ஹிஸ்ட்ரி அவ்வளவு தான்.

ஆனால் இன்று வரை அவை தான் பாப் இசையில் அதிகமாக விற்றுக் கொண்டிருக்கிற ஆல்பங்கள்.

அவர் 90களில் மிகுந்த மனஅழுத்தம், மனஉளைச்சல் காரணமாக தன்னுடைய இசைப்பணியை நிறுத்திக்கொண்டார். அவருக்குள் அவரின் பிளாஸ்டிக் சர்ஜரிக்காக உள்நுழைந்த வலி நிவாரணி மருந்துகளே அவரின் தவிர்க்க முடியாத பலகீனங்களாகிப்போய் அவரை நிரந்தரமாக அதற்கு பிறகு இசைக்க விடாமல் தடுத்துவிட்டது. அவர் தந்தது மிகப்பெரிய விலை. 2009-ல் மரித்துவிடுகிறார். எனினும் திரும்ப இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக திரும்பத்திரும்ப போராடிக்கொண்டே இருந்திருக்கிறார் என்பதன் வெளிப்பாடாக உலகமெங்கும் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக 2007-ல் தயாரானார். ஆனால் அந்த ஆசையின் நீட்சியை நிறைவேற்ற முடியாமலேயே அவரை மாரடைப்பு துடிக்கதுடிக்க அழைத்துக்கொண்டு போய்விட்டது.

அவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானோடு சேர்ந்து பணியாற்ற இருவருமாய் சேர்ந்து முடிவெடுத்திருந்த நிலையில் தான் அந்த சோகம் நடந்தேறியது.

அவர் ஒரே நேரத்தில் இசைத்து, பாடி, பாடல் எழுதி, நடித்து, இயக்கக்கூடிய திறமை கொண்டவர். அவர் இறுதிக்காலத்தில் கடைசி முயற்சியாக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதற்காக பயிற்சி எடுத்துக்கொண்ட காட்சிகளை பதிவு செய்து வைத்திருந்ததால், அதையே ஒரு திரைப்படமாக எடிட் செய்து வெளியிட்டபோது மாபெரும் வெற்றி பெற்றது.

தோல்வி என்பதே அறிந்திராத மைக்கேல் ஜாக்சன் காலத்திடம் மட்டும் வெற்றி கொள்ள முடியவில்லை.

மைக்கேல் ஜாக்சன் நடனத்தை காப்பி அடிக்கிற பிரபு தேவா கூட, அவரின் முகத்தில் வெளிப்படும் ஆயிரம்ஆயிரம் பாவங்களை தன்னுடைய நடனத்தில் தவறவிடுகிறார். அதனாலேயே தான் உலகத்தில் ஒரு மைக்கேல் ஜாக்சன் தான் என்பது மாற்ற முடியாததாகிறது.

அவர் பாடிக்கொண்டே, ஆடுவார். அவரின் பாடலில் சுருதியும், நடனத்தில் தாளமும் இமியும் பிசகாது. கச்சிதத்தில் உலகத்தரம்.

13 முறை கிராமி விருது பெற்றிருக்கிறார். யாரும் இந்த சாதனையை தொடவில்லை.

மைக்கேல் ஜாக்சன் காட்டுகிற முகபாவம் பார்த்து, பார்வையாளர்களில் லட்சக்கணக்கான பெண்கள், ஆண்கள் கதறி அழுதிருக்கிறார்கள். அந்த பரவச கண்ணீர் இன்றும் நின்றபாடில்லை. இப்போதும் அவருடைய ஆல்பங்கள் விற்பனையில் முன்னணியில் தான் நடனம்போடுகிறது.

டேக் தி ஹீட் ஆஃப் மீ என்று அவர் உயிர்த்துடிப்போடு நாளங்கள் புடைக்க பாடினார். அவரின் தாகம் இறுதிவரை தணிக்கப்படவேயில்லை. அது ஒரு ஒடுக்கப்பட்ட உணர்வின் குறியீடாகவே இன்றளவும் மரபணுக்களில் நிரைவேறா நிராசையாய் தொடர்கிறது.

அவரின் மனைவி லிசா ஜாக்சன், பிள்ளைகள் பிரின்ஸ் ஜாக்சன், பாரிஸ் ஜாக்சன், மைக்கேல் ஜாக்சன் ஜுனியர்

90களில் அவரின் ஆல்பம் ஒன்று 100 கோடிக்கு விலை போனது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகும் 100 கோடி ஒரு படம் வசூலித்ததென்றால் இந்தியாவில் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அந்த நிலையை அவர் 25 ஆண்டுகளுக்கு முன்பே தொட்டுவிட்டிருந்தார். அப்படியென்றால் இந்த வசூல் சாதனை மாதிரி 100 மடங்கு அதிகமான புகழை, பணத்தை, அன்பை அவர் அப்போதே சம்பாதித்திருந்தார்.

யாரும் எளிதில் தொடமுடியாத உயரம்.

இப்போது வரை பாப், ராப், ஹிப்ஆப் என அனைத்து ரக மேற்கத்திய இசைவடிவங்களிலும் அவரின் தாக்கங்கள் தவிர்க்க இயலாததாகவே இருக்கிறது. அவரின் பாதிப்பு இல்லாத மேற்கத்திய இசை இல்லை என்பதே நிதர்சனம்.

மைக்கேல் ஜாக்சன் கறுப்பினத்தவர் என்பதால் அவரின் பாடல்களை ஒளிபரப்ப எம் டீவி முதலில் முன்வரவில்லை. ஒரு கட்டத்தில் மக்களின் பேராதரவை கண்டு மிரண்டு போய், ஒவ்வொரு அரைமணிநேரத்திற்கு ஒரு முறை மைக்கேல் ஜாக்சன் பாடலை ஒளிபரப்ப வேண்டிய கட்டாயத்திற்கு அந்த இசைச்சேனல் தள்ளப்பட, அதன்பிறகு அவர் கேட்ட சம்பளத்தை தந்து அவரின் பாடல்களை விடாமல் ஒளிபரப்பத் துவங்கியது.

அந்த இடத்தை தொடுவதற்கு அவர் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. கறுப்பர் என்கிற நிறபேதம் அவரை முன்னேற விடாமல் மிகவும் தடையாக இருந்தது. ஒரு மாபெரும் கலைஞனை நிறபேதம் ஏற்படுத்திய தாழ்வுமனப்பான்மை மனோநிலை படிப்படியாக பல பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவைத்து உயிரை பறிக்கிறவரை குரூர வேட்கையோடு பயணித்து, அந்த கலாப்பூர்வ ஆன்மத்தை காவு வாங்கிய பிறகே ஓய்ந்திருக்கிறது.

இந்த இடத்திலாவது புறஅழகின் மீது கொண்டிருக்கிற நாட்டத்தை தவிர்த்து, அகஅழகை நேசிக்கிற மனநிலைக்கு மாற வேண்டியதன் அவசியத்தை அவரின் வலி நிறைந்த மரணம் ஒவ்வொருவருக்குள் உணர்த்திக்கொண்டே இருக்கிறது.

காகிதப்பூவின் வண்ணமா, பூவின் வாசமா??

விடாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறது அவரின் எவருமற்று தனிமையில் துடிதுடிக்க அடங்கிய அவரது ஆன்ம மரணம்.

மரணம் கடந்த மகாகலைஞனுக்கு  மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக