புதன், 26 ஆகஸ்ட், 2020

சூரரைப் போற்று ! நஷ்டமானாலும் பரவாயில்லை!” – ஓடிடி-க்கு ஏன் வந்தது ....?

  தேவன் சார்லஸ்- விகடன்.com : சூரரைப் போற்று முதல்முறையாக பெரிய பட்ஜெட் படம், அதுவும் பெரிய ஸ்டாரான சூர்யாவின் ப
சூரரைப் போற்று
டம் நேரடி ஓடிடி ரிலீஸூக்கு வந்திருப்பது சினிமா உலகில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. பொன்மகள் வந்தாள்’ படம் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் புதுக்கணக்கைத் தொடங்கிவைத்தவர் சூர்யா. முதல் பெரிய பட்ஜெட் + பெரிய ஸ்டார்காஸ்ட் கொண்ட படமாக ‘பொன்மகள் வந்தாள்’ ஓடிடி-யில் நேரடி ரிலீஸ் ஆனது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் முதல்முறையாக மிகப்பெரிய தொகைக்கு நேரடி ஓடிடி ரிலீஸூக்கு விற்கப்பட்டிருக்கிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’.

முதல்முறையாக பெரிய பட்ஜெட் படம், அதுவும் பெரிய ஸ்டாரான சூர்யாவின் படம் நேரடி ஓடிடி ரிலீஸூக்கு வந்திருப்பது சினிமா உலகில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது

Suriya, Rajasekar Karpoora Pandian
Suriya, Rajasekar Karpoora Pandian

ஏன் ஓடிடி ரிலீஸ்?!

கடந்த ஏப்ரல் மாதம் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை நேரடி ஓடிடி ரிலீஸுக்கு வாங்கும்போதே அமேசான் நிறுவனம் ‘சூரரைப் போற்று’ படத்துக்கும் டீல் பேசி அட்வான்ஸ் கொடுத்துவிட்டது. ஆனால், ‘சூரரைப்போற்று’ நேரடி ஓடிடி ரிலீஸா அல்லது தியேட்டர் ரிலீஸுக்குப் பின் ஒளிபரப்பலாமா என்பதை ஆகஸ்ட்டில் முடிவு செய்யலாம் எனப் பேசப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் செப்டம்பரில் தியேட்டர்கள் திறந்தாலும் 40 சதவிகிதம் பார்வையாளர்கள்தான் தியேட்டருக்கு வரமுடியும் என்பதோடு, பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட இருப்பதாகச் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த வாரம் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் வாசல்களில் மிகப்பெரிய கூட்டம் கூடும் என எதிர்பார்த்தவர்களுக்குப் பேரதிர்ச்சி. கொரோனாவுக்கு முன்பு இருந்த விற்பனைக்கூட இப்போது இல்லை எனத் தகவல் வர, தியேட்டர்களைத் திறக்க அரசு அனுமதியளிக்கவேண்டும் என சொல்லிக்கொண்டிருந்த திரையரங்க உரிமையாளர்களே பின்வாங்க ஆரம்பித்துள்ளனர்.


சுதா கொங்கரா

40 சதவிகிதம் மட்டுமே பார்வையாளர்கள் தியேட்டருக்குள் வரமுடியும். அந்தப் பார்வையாளர்களும் வெளியே வந்து படம் நன்றாக இல்லையென்று சொல்லிவிட்டால் அந்த 40 சதவிகிதக் கூட்டம்கூட தியேட்டருக்கு வராது எனப் பல பிரச்னைகள் சினிமா உலகில் விவாதிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில்தான் எப்படியும் கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கும்வரை தியேட்டருக்குப் பார்வையாளர்கள் வரப்போவதில்லை என்பதால் ஓடிடி-யிலேயே ரிலீஸ் செய்வதற்கான வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிடலாம் என 2டி நிறுவன சிஇஓ ராஜசேகர் கற்பூரபாண்டியனிடம் சொல்லியிருக்கிறார் சூர்யா.

ஓடிடி-யில் வெளியாகும் `சூரரைப் போற்று'... காரணம் பகிரும் சூர்யா!

Also Read

ஓடிடி-யில் வெளியாகும் `சூரரைப் போற்று’… காரணம் பகிரும் சூர்யா!

‘சூரரைப் போற்று’ படத்தின் பட்ஜெட் என்ன?!

2டி தயாரிக்கும் படங்களுக்குத் தனிநபர்களிடம் ஃபைனான்ஸ் வாங்காமல் வங்கிகள் மூலம் மட்டுமே கடன் வாங்கும் வழக்கத்தை வைத்திருக்கிறார் சூர்யா. ‘சூரரைப் போற்று’ படத்துக்கு சூர்யாவின் சம்பளம் இல்லாமல், 30- 40 கோடி ரூபாய் செலவாகியிருக்கும் எனச் சொல்கிறார்கள். ஏர்லைன்ஸ் பிசினஸ் பற்றிய கதை என்பதால் விமானங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு ஷூட் செய்யப்பட்டிருக்கின்றன.

சூர்யாவின் சம்பளம் என்பது சில படங்களுக்கு முன்புவரை 15 கோடி ரூபாய் ப்ளஸ் தெலுங்கு உரிமம் என்பதுதான். இதையெல்லாம் சேர்த்தால் சூர்யாவின் சம்பளம் 30 கோடி ரூபாய் வரும் என்பது கணக்கு. ஆனால், இப்போது இந்த 30 கோடி ரூபாயில் சில பல கோடிகளை சூர்யா, நேரடி ஓடிடி ரிலீஸுக்காக விட்டுக்கொடுத்திருக்கிறார் என்றே தெரிகிறது.

சூரரைப் போற்று
சூரரைப் போற்று

100 கோடிக்கு வாங்கியதா அமேசான் ப்ரைம்?!

”என்னுடைய சம்பளத்தை வைத்து லாபக்கணக்குப் பார்க்கவேண்டாம். எனக்கு சம்பளத்தில் நஷ்டம் ஆனாலும் பரவாயில்லை. படத்துக்குச் செலவு செய்த பணத்தைவிட நல்ல விலைக்கு கேட்டால் ஓகே” என சூர்யா சொல்ல, அமேசான் ப்ரைமுடன் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.

‘சூரரைப் போற்று’ படத்தை அமேசான் நிறுவனம் 50 கோடி ரூபாய்க்கு வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. டிவி ஒளிபரப்பு உரிமம் தமிழில் சன் டிவிக்கும், தெலுங்கில் ஜெமினிக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு 25 கோடி ரூபாய் இருக்கும் எனத்தெரிகிறது. இதில்லாமல் இந்தி உரிமத்தையும் பாலிவுட்டின் முன்னனி இளம் நடிகர் கேட்டுக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அதனால், அங்கேயும் நல்ல விலைக்கு விற்கப்படும் என்பதால் ‘சூரரைப் போற்று’ சூர்யாவுக்கு நல்ல லாபம் கொடுத்திருப்பதாகவே சொல்கிறார்கள்.

இந்த லாபத்தில் இருந்துதான் 5 கோடி ரூபாயை ஒதுக்கி கல்வி உதவிகள் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறார் சூர்யா.

Soorarai Pottru
Soorarai Pottru

ஏன் அக்டோபர் 30 ரிலீஸ்?!

அக்டோபர் 30-ம் தேதி ரிலீஸுக்கு ஏன் இப்போதே அறிவித்துவிட்டார்கள் என்கிற கேள்வியும் இருக்கிறது. அமேசான் நிறுவனம் ப்ரமோஷனுக்கு மட்டும் 1 மாதம் வேண்டும் என்று, படத்துக்கான ப்ரமோஷன் பிளானை சொல்லியிருக்கிறது. அதனால்தான் இப்போதே அறிவித்துவிட்டார்கள் என்கிறார்கள்.

வாழ்த்துகள் சூர்யா… ‘சூரரைப் போற்று’ புதிய சாதனைகள் படைக்கட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக