புதன், 26 ஆகஸ்ட், 2020

பஹ்ரைன் ..கணபதி சிலைகளை துண்டாக உடைத்த பெண் கைது

  பஹ்ரைன்  நாட்டில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பர்கா அணிந்த ஒரு பெண் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கணபதி சிலைகளை தூக்கி ஏறியும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் அந்த நாட்டு காவல்துறையின் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
பஹ்ரைனின் தலைநகர் மனாமாவின் ஜுஃபைர் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த அராஜகப் போக்கை அருகில் நின்ற ஒரு பெண் வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இன்னும் சில நாட்களில் உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் விநாயகர் சதூர்த்திக்காக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிலைகளை, பர்கா அணிந்த ஒரு பெண் இது முஸ்லிம் நாடு இங்கே யார் இந்த சிலைகளை வாங்குவார்கள் என ஆதிக்கப்போக்குடன் சிலைகளை ஒவ்வொன்றாக உடைத்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக வீடியோ வைரலான நிலையில், அந்த பெண் மீது அந்நாட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் இது வெளியிட்டுள்ள அறிக்கையில்: வேண்டுமென்றே சிலையை சேதப்படுத்தியதற்காக 54 வயதான ஒரு பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உறுதி செய்துள்ளார்
kumudam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக