சனி, 4 ஜூலை, 2020

கைகளை உடைத்த போலீஸ் அராஜகம் ..சென்னையில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட ...

கபிலன் காமராஜ் ; "தலைநகரமான சென்னையில் மட்டுமே நூற்றுக்கு மேற்பட்டவர்களின்  கைக்கால்கள் போலீஸாரால் உடைக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள்” என்று அதிர்ச்சியூட்டுகிறது நக்கீரனுக்கு கிடைத்த பிரத்யேக ஆதாரத்தகவல்"-2019 ஆகஸ்ட் 31 ந்தேதி நக்கீரனில் அம்பலப்படுத்தியபோது கண்டுகொள்ளப்படாத செய்தியாக இருந்ததன் விளைவுதான் சாத்தான்குள சம்பவங்கள் தொடர்வதற்கும் காரணம்! என Mano Soundar Mano பதிவிட்டிருந்தார்
அப்படி கைக்கால்கள் உடைக்கப்பட்டவர்களின் அனுபவம் என்ன என திலீபன் மகேந்திரன் விவரித்த பதிவை படித்த பொழுது மனித உரிமை பற்றி எவ்வித அக்கறையும் இல்லாத ஒரு மனநிலையை காவல்துறை மத்தியில் உருவாக்கி வைத்திருப்பது புலப்படுகிறது.
திலீபன் மகேந்திரனின் பதிவு
Negative விஷ்யம் எதையும் பேச வேனாம்னுதான் இப்பல்லாம் நா எந்த Negative விஷ்யத்தையுமே கண்டுக்குறது கெடையாது... Only Positive Vibe..
Negative -வா நடக்குற விஷ்யத்த பாத்தா கோபம் தலைக்கு மேல ஏறும், மனசுல சமநிலை இருக்காது, கெட்ட கெட்ட வார்த்தையா அசிங்கமா பேசி நம்ப மரியாதையே நாமளே கெடுத்துக்குற மாதிரி இருக்கும்..
இந்த சாத்தான்குளம் இரட்டை கொலை பிரச்சனையும் அப்டிதான் கடந்து போய்டலாம்னு நெனச்சேன் ஆனா என் சார்பா ஒரு போஸ்ட்டாவது போட்டாதான் எனக்கு மன ஆறுதல் கெடைக்கும்...

போலிஸ் அராஜகம்-னு பேசுறாங்களே!? லாக்கப்ல அடிச்சே கொலை-னு அதெல்லாம் நானே அனுபவிச்சிருக்கேன்...
மொத்தம் மூனு முற ஜெயிலுக்கு போயிருக்கேன். ரெண்டாவது முறை 2015, இப்ப எனக்கு 28 வயசுனா அப்போ 23 வயசு சின்ன பையன், ரொம்ப ஒல்லியா வேற இருப்பேன்... கொடி எரிச்சேன்னு கேஸு அது கரைக்ட்டா, தப்பா-னு Discussion-க்கு போக வேனாம்..
நா ஒருத்தான் -தான் அரெஸ்ட்.. தடிமாடு மாதிரி 8 போலிஸ் அதுல ரெண்டு குண்டு மூதேவிங்க என் தொடையில அழுத்தி புடிச்சி உக்காந்துட்டானுங்க, ஒருத்தன் என் கைய பின் பக்கமா புடிச்சி இழுத்துக்குறான்.. ஒருத்தன் ஒரு பெரிய பைப்.. அத வச்சி உச்சு பாதத்துலையே அடிக்கிறான். பளீர் பளீர்னு...
இது அடிக்கிறதுக்கு முன்னாடி கைய நீட்டவச்சி விரல்ல மட்டுமே அடிக்கிறானுங்க... அடிக்கிற அடியில விரலு கிழண்டு விழுந்துட்ர மாதிரி.. எல்லா விரல்லருந்தும் மட்டக் மட்டக்குனு சத்தம் வருது...
ஒரு மணி நேரம் அடிச்ச பிறகு ஒரு கிழ போலிஸ் பக்கத்துல வந்து சிரிச்சி பேச்சி கொடுத்துட்டே என் கைய புடிச்சி ஒவ்வொரு விரலா பின்பக்கமா இழுத்து ஒவ்வொன்னா முறிக்கிறான்.. வலிதாங்க முடியாம கத்துறேன்.. அவன் விடவே இல்ல நா கத்துரத ரசிச்சிட்டே ஒவ்வொரு விரலா பத்து விரலையும் பின்பக்கமா இழுத்து இழுத்து முறிக்கிறான்...
என்னால நடக்கவே முடியில குதிங்கால் ரொம்பவும் வீங்கிப்போச்சி அப்டியே ரெண்டு பேலிஸ் அவனுங்க தோள்-ல என் கைய போட்டு தர தரனு போலிஸ் வேணுக்குள்ள இழுத்துட்டு போய் போட்டானுங்க..
இத்தோட முடிஞ்சிதுனு நெனச்சா! கருப்பு துணிய கண்ணுல கட்டி எங்கையோ அழச்சிட்டு போறானுங்க, "ஆச்சுடா மகேந்திரா சாவடிக்கதான் போறானுங்க, நீ கொல குத்தம், கற்பழிப்பு, திருட்டுனு, எதுவும் பன்ல அவனுங்க சுட்டானுங்கன்னா எழுந்து நின்னு நெஞ்சில சூடு வாங்கிக்கடானு" என் மைண்ட்ல சே குவேரா 'வ பத்தி படுச்சதெல்லாம் ஓடுது. அந்த நிலமையில உங்க என்ன ஓட்டம் எப்டி இருக்கும்னு மட்டும் யூகிச்சி பாருங்க..
வேண் ஒரு இடத்துல நிக்குது சில பேர் தமிழ் பேசுறானுங்க, சிலர் ஹிந்தி.. என் ரைட் கையில் ஏதோ ஈரமா சுத்துரானுங்க.. கைய புடிச்சி ரெண்டு கல்லுக்கு இடையில வக்கிற மாதிரி உணர்வு. பட்டக்_னு ஒரு சவுண்ட். என் கைய இரும்பு கம்பிய கொண்டு அடிச்சே உடைச்சிட்டானுங்க, ஆறுதல் சொல்ல ஒருத்தனும் இல்ல, துடிக்கிறேன்..
மறுபடியும் வேண்-ல ஏத்திட்டு போறானுங்க கண்-ல கட்ன கருப்பு துணி கட்ன மாதிரியே இருக்கு, கை உடைஞ்ச என்னைய சீட்ல கூட உக்கார வைக்கல, கீழதான் உக்காந்துருந்தேன், வலியால துடிக்கிறேன், என்ன சுத்தி இருக்க போலிஸ்காரனுங்க ஏதோ பேசி சிரிச்சிட்டு வரானுங்க..
கைய உடைச்சிட்டானுங்க மறுபடி என்னத்த செய்ய கூட்டி போறானுங்கனு என் மைண்ட்ல ஏதோ ஒன்னு ஓடிட்டே இருக்கு, நா தப்பிக்க ட்ரை செஞ்சி "பேசின் பிரிட்ஜ் கீழ உழுந்துட்டேன்னு மாவுக்கட்டு போட ஹாஸ்பிடலுக்கு கூப்டு வந்தானுங்க.. அப்பதான் 4 மணி நேரம் கழிச்சி கறுப்பு துணியையே கெழட்டி விட்டானுங்க... அவ்ளோ டார்ச்சர்.. சைகோ'வா இருப்பானுங்க போல..
ஒவ்வொரு முறையும் அப்டிதான் முதல் முறை சிறைல அரெஸ்ட் ஆகும்போது 15 பேர் சேந்து லத்திய வச்சி அடிச்சானுங்க, ராம்குமார், ஸ்வாதி மேட்டர்ல 20 நாள் ஜெயில்ல மொண்டல் ப்ளாக்ல போட்டு டார்ச்சர் பன்னானுங்க...
ஒரு வாரத்துக்கு முன்னாடி கூட போலிஸ்ல E Pass இல்லனு தம்பரத்துக்கு அலோவுட் கிடையாதுனு வண்டிய புடிங்கி வச்சிக்கிட்டானுங்க.. 4 மணி நேரம் சும்மாவே உக்காந்துருந்தேன் வண்டிய கொடுங்கனு கெஞ்சல்லாம் இல்ல..
அதுல ஒரு போலிஸ் எடுத்த உடனே வாடா, போடானு பேச ஆரம்பிச்சான்.. நா " வாடா, போடானு மரியாத இல்லாம பேசுற வேலையெல்லாம் வச்சிக்காதிங்கனு சொன்னேன்"
அத என் கூட வந்த பையன் நா தங்கிருக்க ஏரிய முழுக்க சொல்லிட்டிருந்தான்.. "இந்தண்ணன் போலிசிட்டையே எதித்து நின்னு பேசுறார்'டானு.
அவன் சொன்னான் 'என்னையெல்லாம் சும்மா பாத்தாலே போலிஸ் அடிப்பானுங்க, ஏன் அடிக்கிறான், எதுக்கு அடிக்கிறான்னு கூட தெரியாது'னு சொன்னான்...
இந்த லட்சன தலமுடியிலதான் இருக்கு இந்த சைகோ போலிஸ் நிலமை...
எல்லா போலிஸ் அப்டியில்ல ப்ரோ - வயில ஏதாவது வந்துடும் ஒழுங்கா போயிரு... 😴😴😴
Sleep Well.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக