திங்கள், 20 ஜூலை, 2020

திருமாவும் எங்கள் பார்வையில் ஒரு சங்கிதான்... அருந்ததியர் சமுகத்தில் ... அதிருப்தி

Thangaraj Gandhi : இங்கு பாமக. மட்டுமல்ல. விசிக.வும் தன்னை அறிவு ஜீவிகளின் கூடாரம் என அறிவித்து சில மடத்தனமான வாரிச்சுருட்டல்களை செய்கிறது‌.   திருமா மீது வன்மம் தான்.
அருந்ததியர் உள் இட ஒதுக்கீடுக்காக ஒரு போராட்டம் துண்டறிக்கை கூட வெளியிடாத திருமா.. உள் இட ஒதுக்கீடு கலைஞர் வழங்கியதும் நேக்கா அம்பேத்கர் விருது கலைஞருக்கு கொடுத்து.. போராட்ட உரிமையை ஆட்டேய் போட்டார்.
மேடையில் பேராடிய ஒரு சக்கிலியர் தலைவருக்கும் இருக்கை தரப்படவில்லை‌‌.

இங்க உள் இட ஒதுக்கீடுக்காக நெருப்புல மூனு உசுரு இழந்திருக்கோம் அதைக்கூட திருமா மதிக்கவில்லை.
அதே போல் திமுக.விலிருந்து விலகியவர் சக்கிலியர் VP.துரைசாமி‌..அவர் இருக்கும் இடத்திற்கு திமுக.தலைவர் நிரப்பியது அந்தியூர் செல்வராஜ் எனும் சக்கிலியர். இந்த விளையாட்டை நடத்திய பாஜக. தலைவர் எல்.முருகன் சக்கிலியர்‌. 

ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு தொடுத்தவர் எஸ்.டி‌கே. சக்கிலியர்.
இந்த இடத்தில் டிவி விவாதங்களில் அருந்ததியர் தலைவர்கள் தான் முன்னின்று அம்பேத்கரிய பெரியாரிய சிந்தனையை பேசியிருக்க வேண்டும். அந்த அளவுக்கா தகுதியற்று வீழ்ந்து கிடக்கிறது எங்கள் சமூகம்.


குத்தகை எடுத்தார் போல அத்தனை டிவியும் எம்.பி. பதவிக்கு பயந்து திருமாவை உட்கார வைத்து விவாதம் நடத்தியது என்றால்..
இதையெல்லாம் பார்த்துவிட்டு சொரணைகெட்டுப் போய் பின்னால் திரிய நாங்கள் என்ன தமிழ்புலி கட்சியிலா இருக்கிறோம்.
எங்கள் இனத்திலிருந்து ஒரு விதை கூட முளைக்கவிடாமல் முந்தித்தடுக்கும் யாராய் இருந்தாலும் ஏன் திருமாவும் எங்கள் பார்வையில் ஒரு சங்கிதான்.
காரணமின்றி யாரையும் வெற்று லைக்கிற்காக ஆதரிக்கவும் மாட்டேன். எதிர்க்கவும் மாட்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக