வெள்ளி, 31 ஜூலை, 2020

நடிகர் சுஷாந்த் இறப்பு மர்மம் ..பல கோடி.. அந்த 6 நாட்கள்....திருப்பம்.. காதலியை வளைக்கும் போலீஸ்!

tamil.oneindia.com/ - siyamsundar: பாட்னா: பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையில் புதிய திருப்பமாக தற்போது அவரின் காதலியை பீகார் போலீஸ் குறி வைத்து உள்ளது. இதில் பல கோடி முறைகேடு நடந்து இருப்பதாக பீகார் போலீஸ் தெரிவித்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ம் தேதி தனது மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
முதல் நாள் நண்பர்களுடன் பார்டி கொண்டாடியவர், மறுநாளே இரவோடு இரவாக தற்கொலை செய்து கொண்டார்.
இவரின் தற்கொலைக்கு நிறைய காரணங்கள் சொல்லப்பட்டது.   மன அழுத்தத்தில் இவர் கஷ்டப்பட்டதாக கூறப்பட்டது. இவர் தற்கொலைக்கு மன அழுத்தம்தான் காரணம் என்றுகூறப்பட்டது.
எனக்கு 24 டவுட் இருக்கு.. சுஷாந்த் சிங் நிச்சயம் தற்கொலை செய்யலை.. கொலைதான்.. அடித்துக் கூறும் சாமி
 அதுமட்டுமின்றி பாலிவுட் திரை உலகம் இவரை ஒதுக்கி வைத்ததும், இவரின் தற்கொலைக்கு காரணம் என்று கூறப்பட்டது. பாலிவுட் நடிகர் சல்மான் கான் இவரை வளர விடாமல் தடுத்தார் என்றும் புகார் வைக்கப்பட்டது. அதேபோல் சல்மான் மற்றும் கரண் ஜோகர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் புகார் வைக்கப்பட்டது.
நடிகை கங்கனா ரனாவத் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து நாளுக்கொரு சந்தேகங்களை எழுப்பி வந்தார் .

ஆனால் தற்போது சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதன்படி சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபோர்த்தி கொடுத்த அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
அதன்படி சுஷாந்த் சிங்கிடம் இருந்து 15 கோடி ரூபாய் வரை ரியா முறைகேடு செய்து பெற்று இருக்கிறார். அவரை மிரட்டி இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன் ரியாவும் அவரின் சகோதரரும் சேர்ந்து மும்பையில் இரண்டு நிறுவனங்களை தொடங்கினார்கள். இந்த நிறுவனத்தை தொடங்க சுஷாந்த் சிங் பணத்தை ரியா பயன்படுத்தி உள்ளார் என்று கூறப்படுகிறது. சுஷாந்த் சிங் அனுமதி இன்றி அவரின் பணத்தை ரியா எடுத்துக் கொண்டதாகவும், அவரின் வங்கி கணக்கில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை ரியா எடுத்துள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

இந்த விஷயம் தெரிந்து சுஷாந்த் சிங் மற்றும் ரியா இடையே சண்டை வந்தது என்றும் கூறுகிறார்கள். ஆனால் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் சுஷாந்த் சிங்கை ரியா துன்புறுத்தி வந்தார் என்று சுஷாந்த் சிங் அப்பா கேகே சிங் புகார் அளித்துள்ளார்.
ரியாவிற்கு எதிராக மேற்கண்ட புகார்களை கே கே சிங் போலீசிடம் அளித்துள்ளார். சுஷாந்த் சிங்கை மிரட்டி இத்தனை நாட்கள் ரியா கட்டுப்படுத்தி வந்தார் என்று அவர் புகார் அளித்துள்ளார்.

எனக்கு பணம் வேண்டும் , இல்லையென்றால் உன் சினிமா வாழ்க்கையை முடித்து விடுவேன் என்று ரியா சுஷாந்த் சிங்காய் மிரட்டியதாக சுஷாந்த் சிங்கின் அப்பா போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதோடு சுஷாந்த் சிங் தனது சினிமா வாழ்கையையே முடித்துக் கொண்டு கூர்க் சென்று விவசாயம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் இதற்கு ரியா அனுமதி அளிக்கவில்லை. இதனால் சண்டை வந்துள்ளது.

இந்த சண்டை முற்றவே, சுஷாந்த் சிங் தன்னுடைய விவசாய திட்டத்தில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த ரியா ஏற்கனவே பெற்றுக்கொண்ட பணத்தோடு கூடுதலாக 3 கோடி ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு, நகைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி இருக்கிறார். சுஷாந்த் சிங் இருந்த மும்பை வீட்டில் இருந்து சரியாக 6 நாட்களுக்கு முன் ரியா வெளியேறி இருக்கிறார். 7

இந்த விஷயம் தெரிந்த சுஷாந்த் சிங் அடுத்த 6 நாட்கள் கடுமையான மன அழுத்தத்தில் கஷ்டப்பட்டார், அதன்பின்தான் தற்கொலை செய்து கொண்டார் என்று அவரின் அப்பா புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை ஒருபக்கம் பீகார் போலீஸ் , இன்னொரு பக்கம் மும்பை போலீஸ் விசாரிக்கிறது. இன்னொரு பக்கம் தற்போது அமலாக்கத்துறையும் இந்த பணப்பரிமாற்றம் குறித்து வழக்கு பதிவு செய்து உள்ளது. சுஷாந்த் சிங் மரணத்தில் விரைவில் முக்கிய திருப்பம் ஏற்பட போகிறது என்றும் கூறுகிறார்கள். நேற்றுதான் பீகார் போலீஸ் ரியா வீட்டில் அவரை விசாரணை செய்ததும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக