வியாழன், 11 ஜூன், 2020

Breaking news மருத்துவ படிப்பில் 50 சதவிகித இடஒதுக்கீடு -உயர்நீதிமன்றத்தில் திமுக..

கலைமோகன் - நக்கீரன் :முதுநிலை மருத்துவ, பல் மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இடங்களை ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யக்கோரி திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் முறையிடக்கோரி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதன் அடிப்படையில் தற்போது முதுநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இடங்களை ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கக்கோரி திமுக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக