வியாழன், 11 ஜூன், 2020

கொரோனா... சித்த மருத்துவத்தில் குணமாகிறது? புழல் சிறை கைதிகள் குணமானார்கள் ?

சித்தா சிகிச்சை,புழல் கைதிகள், மீண்டனர்தினமலர் : சென்னை : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பீதி அடைந்துள்ள மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் தனித்த சித்த மருத்துவthத்தில் நல்ல பலன் கிடைத்துள்ளது. சென்னை புழல் சிறையில் 25 கைதிகளுக்கு அளிக்கப்பட்ட சித்தா சிகிச்சையில் ஒரு வாரத்தில் 23 பேர் முற்றிலும் குணமடைந்துள்ளனர். மீதமுள்ள இருவரும் தொற்றின் தன்மை குறைந்து குணமாகி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் சில மாவட்டங்களில் குறைந்தாலும் தலைநகரான சென்னை அதையொட்டிய திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.மாநிலம் முழுவதும் இதுவரை 36 ஆயிரத்து 841 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் சென்னையில் மட்டும் பாதிப்பு 26 ஆயிரத்தை நெருங்கி விட்டது.தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருதால் நிலைமை என்னவாகுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர். பலர் சென்னையை விட்டு சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
இதற்கு தீர்வு காண பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் அலோபதியுடன் சித்த மருத்துவத்தையும் சேர்த்து ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்பகுதிகளில் பாதிப்பின் தன்மை வெகுவாக குறைந்தது. இதையடுத்து சோதனை ரீதியாக தனித்த சித்தா சிகிச்சைக்கு அரசு அனுமதி அளித்தது.

இதற்காக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனர் கணேஷ் தேசிய சித்தா ஆராய்ச்சி மைய இயக்குனர் மீனாகுமாரி, மூத்த டாக்டர் ஜெய்பிரகாஷ் நாராயணன், சித்தா டாக்டர் வீரபாபு மற்றும் அரும்பாக்கம் சித்த மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் தனித்த சித்தா கிகிச்சையில் இறங்கி உள்ளனர். சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவஹர் இன்ஜினியரிங் கல்லுாரியில் தனித்த சித்தா பிரிவு துவக்கப்பட்டு 99 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதில் முதற்கட்டமாக சிகிச்சைக்கு வந்த 30 பேருக்கு தற்போது பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுக்காக சித்தா குழுவினர் காத்திருக்கின்றனர்.


புழல் சிறையில்


இந்நிலையில் புழல் சிறையில் சித்தா டாக்டர் வீரபாபு குழுவினர் அளித்த சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. புழல் சிறையில் ௩௦ கைதிகள் ஒரு பணியாளர் என ௩௧ பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.அவர்களில் 25 கைதிகள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கபசுர குடிநீர் மூலிகை தேநீர் சூரிய குளியல் என சித்தா சிகிச்சை தரப்பட்டது.ஒரு வார சிகிச்சை முடிந்து நடந்த பரிசோதனையில் 23 பேருக்கு தொற்று முற்றிலும் நீங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு அதிகம் இருந்த இரண்டு பேருக்கு தொற்றின் தீவிரம் குறைந்துள்ளது. அவர்கள் ஓரிரு நாளில் பூரண குணம் அடையும் நிலையில் உள்ளனர். இது அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கொரோனா தொற்று தடுப்புக்கான சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
கொரோனா தடுப்பு பணியில் பல்வேறு வகையில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அலோபதி சிகிச்சை மட்டுமின்றி தனித்த சித்தா சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. தனித்த சித்தா சிகிச்சையில் நல்ல பலன் கிடைத்துள்ளதாக வந்துள்ள தகவல்க மகிழ்ச்சி அளிக்கிறது.
சென்னையில் ஜவஹர் கல்லுாரியில் தனித்த சிகிச்சை தொடர்கிறது. பாதிப்புக்கு உள்ளானோர் விருப்பத்தின் அடிப்படையில் எந்த முறை சிகிச்சையும் எடுக்கலாம்.ஓமியோபதி மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வருகின்றனர். நோய் பரவலை கட்டுப்படுத்த அரசின் விதிமுறைகளை கடைப்பிடித்து மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர் வீரபாபு கூறியதாவது:அரசு அனுமதியுடன் புழல் சிறையில் அளித்த தனித்த சித்தா சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. ஒரு வாரத்தில் 23 பேருக்கு பாதிப்பு நீங்கியுள்ளது பெரும் நம்பிக்கையை அளித்துஉள்ளது.சாலிகிராமத்தில் உள்ள ஜவஹர் இன்ஜி. கல்லுாரியில் உள்ள தனித்த சித்தா மையத்தில் அரசு அனுப்பியோர் மட்டுமின்றி பொதுமக்களும் தாமாக சிகிச்சைக்கு வந்துள்ளனர்.சித்தா சிகிச்சை பெறுவோரில் முதற்கட்டமாக 30 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் முடிவுகள் வெளியாகும்.கொரோனா பாதிப்பு வராமல் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.கொரோனா பாதிப்பு வந்தால் அச்சம் வேண்டாம்; தமிழகத்தின் சித்த மருத்துவம் கை கொடுக்கும்.அரசும் சித்தா உள்ளிட்ட சிகிச்சைக்கு ஆதரவு அளித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


இருவருக்கு தொடருது சிகிச்சை


சிறைத்துறை டி.ஜி.பி. சுனில்குமார் சிங் கூறியதாவது:புழல் மத்திய சிறையில் ஒரு பணியாளர் மற்றும் 30 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அதேபோல மதுரையில் இரண்டு, நெல்லையில் இரண்டு, கடலுாரில் நான்கு, திருச்சி சிறையில் ஒன்று உள்ளிட்ட 40 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது இவர்கள் சிறையிலேயே தனிமைப்படுத்தப்பட்டு டாக்டர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கூடுதலாக சித்த மருத்துவமும் அளிக்கப்பட்டது. தினமும் கபசுர குடிநீர் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகள் வழங்கப்பட்டன. இதன் விளைவாக 38 கைதிகள் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து தப்பித்து பூரண குணமடைந்துள்ளனர். இரண்டு கைதிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களும் விரைவில் குணடைவர். இவ்வாறு அவர் கூறினா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக