புதன், 24 ஜூன், 2020

கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் செல்வதற்கு கடும் கண்டனம்

pr pandiyanகூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதா? மத்திய அரசுக்கு  பி.ஆர்.பாண்டியன் கண்டனம் .
nakkheeran.in -நக்கீரன் செய்திப்பிரிவு: ஆண்டுதோறும் இயற்கை சீற்றங்களால் விவசாயம் பாதிக்கப்படு வருவாய் இழப்பு ஏற்படுமேயானால் கடன் குறித்த நிவாரணத்தை மாநில அரசுகளே ஏற்றுக்கொள்கிறது.  இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உத்திரவாதப் படுத்தப்படுகிறது. எனவே கூட்டுறவே நாட்டுயர்வு என்ற வரலாற்று புகழுக்கு சொந்தமான கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதின் மூலம் மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல் மட்டுமல்ல கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கும் செயலுமாகும். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணானது. கிராமப் பொருளாதார வளர்ச்சியை முற்றிலும் முடக்கும் செயல்.


வங்கிகளில் பன்னாட்டு மூதலீடுகளுக்கு அனுமதி வழங்கி உள்ள நிலையில், அதன் மூலம் உலக பெரும் முதலாளிகளிடம் விவசாயிகளை அடிமைப்படுத்தும். இது குறித்து தமிழக அரசு தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுபாட்டில் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என கொள்கை முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.  இதனை ஏற்க மறுக்கும் பட்சத்தில்  விரைவில் தீவிரமான போராட்டத்தில் களமிறங்குவோம் என எச்சரிக்கிறேன் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக