புதன், 24 ஜூன், 2020

40 சீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுவது தவறான தகவல் - சீனா மறுப்பு

கல்வான் பள்ளத்தாக்கு மோதல்: 40 சீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுவது தவறான தகவல் - சீனா மறுப்பு தினத்தந்தி :  கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுவது தவறான தகவல் என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பீஜிங் . கிழக்கு லடாக் எல்லை பகுதியில்  கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 5 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் காயம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என தகவல்கள் வெளியானது. முன்னதாக சீன அரசு மற்றும் ஊடங்கள் இந்த விவகாரத்தில் இந்திய ராணுவம் அத்துமீறியதாக குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது சீன தரப்பில் உயிரிழப்பு குறித்தும் மறுப்பு தெரிவித்துள்ளது.


இந்த நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுவது தவறான தகவல் சீனா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லிஜியன் சோ கூறி உள்ளார்.

மேலும்  இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது என கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக