வியாழன், 25 ஜூன், 2020

நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை


மாலைமலர் : நெல்லையின் பிரபலமான இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை: நெல்லையில் உள்ள புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் ஹரிசிங். இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, சமீபத்தில் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், மருத்துவமனையில் ஹரிசிங் இன்று தற்கொலை செய்துகொண்டார். தனக்கு கொரோனா இருப்பது பற்றி தெரியவந்ததும், தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக