வியாழன், 25 ஜூன், 2020

சீன கைப்பேசிகள் .. சில நிமிடங்களில் ஆன்லைனில் விற்றுத் தீர்த்தன.. சீனாவிற்கு எதிரான மனநிலையை மீறி அமோக விற்பனை

anti-china-sentiment-india-mobile-phoneshindutamil.in : சீனாவிற்கு எதிரான மக்கள் மனநிலையை மீறி சில நிமிடங்களில் ஆன்லைனில் அதன் கைப்பேசிகள் விற்றுத் தீர்ந்துள்ளன. இது அமேஸான் இந்தியா டாட்காமில் ஜூன் 18 இல் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவுடனான சீனாவின் ஜூன் 15 மோதலில் நம் 20 ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். இதையடுத்து நாடு முழுவதிலும்சீனத் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் சீனாவிற்கு எதிரான கருத்துகள் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதனால், சீனா நிறுவனமான ஒப்போ தனது புதியவகை கைப்பேசியின் ஆன்லைன் அறிமுகத்தை ஒத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், அமேஸான் இந்தியா டாட்காம் ஆன்லைனில் சீனாவின் கைப்பேசிகள் ஜூன் 15 மற்றும் 18 ஆம் தேதிகளின் சிறப்பு ஆன்லன் விற்பனை அறிவித்திருந்தது. இதில், சுமார் ஐம்பதாயிரம் விலையுள்ள ஒன்ப்ளஸ் 8 மற்றும் ஒன்ப்ளஸ் 8 புரோ வகை கைப்பேசிகள் சுமார் 10 லட்சம் எண்ணிக்கைகளில் ஓரிரு நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளன.
இந்திய விற்பனையில் முக்கிய இடம்பெற்ற ஷியோமி கைப்பேசி நிறுவனத்தின் மடிக்கணினி ஜூன் 17 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் மற்றொரு பிரபல ஆன்லன் விற்பனை நிறுவனமான ப்ளிப்கார்ட்டிலும் கைப்பேசிகளில் அதிகவிலையானவை 20 சதவிகிதமும், குறைந்த விலையானவை 80 சதவிகிதம் விற்பனையாகி உள்ளன.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணைத்திடம் அமேஸான் இந்தியா டாட்காம் நிறுவன வட்டாரம் கூறும்போது, ‘சீனாவின் நிலையில் இங்கு பாகிஸ்தான் இருந்திருந்தால் அதன் தயாரிப்புகளை இலவசமாகக் கொடுத்தாலும் இந்தியர்கள் வாங்க மாட்டார்கள்.
சீன எதிர்ப்பு என்பது மக்கள் மனநிலையில் உருவாகி விட்டாலும் அவர்களது செயல்பாடுகளில் அது இன்னும் வரவில்லை. இதனால் இந்திய கைப்பேசிகளின் சந்தையில் சுமார் 70 சதவிகித விற்பனையை கொண்டுள்ள, சீனாவின் தயாரிப்புகள் மீது இந்தியர்கள் உருவாக்கி வைத்துள்ள நம்பிக்கை காரணம்.’ எனத் தெரிவித்தனர்.
இதனிடையே, அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் சார்பில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இத்துடன் 500 சீனப் பொருட்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், அதிக விற்பனையாகும் நுகர்பொருட்கள், துணி, விளையாட்டு பொம்மைகள், காலணிகள், கட்டிடத்திற்கு தேவையானவை மற்றும் மின்னனுச் சாமான்கள், பரிசுப் பொருட்கள், சமையலறைகானவை மற்றும் அழகுப் பொருட்கள் உள்ளிட்டப் பலதும் அடங்கியுள்ளன.
இதற்கானப் பிரச்சாரத்தில் தம்முடன் இணையும்படியும் பல இந்தியப் பிரபலங்களுக்கும் இந்த வர்த்தகக் கூட்டமைப்பின் சார்பில் தனிப்பட்ட முறையில் கடிதங்களும் மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர்களான அமிதாப்பச்சன், அக்ஷய்குமார், அமிர்கான், ஷில்பா ஷெட்டி, தீபிகா படுகோனே, மாதுரி தீட்சித், காத்ரீனா கைஃப் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இதே பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், மஹேந்திர சிங் தோனி, விராட் கோலி அகியோர் உள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக