திங்கள், 25 மே, 2020

சீமானுக்கு துக்ளக் சோவும் குருமூர்த்தியும் நாம் தமிழரை சிவந்தி ஆதித்தனிடம் இருந்து வாங்கி கொடுத்த Flash Back

T.பாலசுப்ரமணிய ஆதித்தன். :
சீமான் , நெல்லைக் கண்ணன்...
2011 ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளக் கூடாது என்று கம்யூனிஸ்ட் நல்லக்கண்ணு தடை ஆணை பெற்ற நேரம் அவருக்கு ஒரு பாராட்டு விழா தாமிரபரணி அமைப்பின் சார்பில் திருநெல்வேலி மார்கெட் திடலில் நடத்தினேன்...
அதில் எனது ஆசான் V.சுந்தரம் IAS அவர்கள் தலைமை தாங்கினார்.
நம்மாழ்வார் ஐயா உள்பட பலர் வந்து இருந்தாலும் வேகமாக பேச ஒரு ஆள் தேவை என்று என் நண்பர்கள் இருவரை சொன்னார்கள்.
அது சீமானும், நெல்லை கண்ணனும். சீமானைப் பற்றி அன்று எனக்கு தெரியாது. அவர் நாடார் சமுதாயம் என்றும் அப்போது எனக்கு தெரியாது. குருமூர்த்தி, சோ பின்னணியில் தினத்தந்தியில் பேசி நாம் தமிழர் இயக்கத்தை இவர் மூலமாக நடத்துகிறார் என்றும்
தெரியாது.
அப்போது சீமான் வைத்து இருந்தது நாம் தமிழர் இயக்கம். கட்சி அல்ல.
நானும் எனது நண்பரும் வளசரவாக்கம் சீமான் வீட்டுக்கு திருநெல்வேலி நண்பர் மூலமாக நிகழ்ச்சிக்கு பேச காலை 11 மணி சென்றோம். என் பெயரை சொன்ன உடன் சீமான் வீட்டில் ஒவ்வொரு அறையாக திறந்து மாடி ஹாலில் அமர வைத்தார்கள்.
சீமான் குளிக்கிறார். அமருங்கள் என்றனர். நாங்கள் இருவர் மட்டுமே ஹாலில் இருந்தோம்.
நான் உட்கார்ந்து இருந்த சோபாவின் கீழ்,எதிரில் சுற்றிலும் புத்தம் புதிய 3 அடி வீச்சு அரிவாள் கட்டு கட்டாக, ஏராளமான துப்பாக்கிகள்,ரிவால்வர்கள் இருந்தன.


ஒரு சினிமாகாரனாக இருந்தவருக்கு இது ஏன்? எப்படி ? என எனக்குள் கேள்விகள். என் நண்பர் என்னை பார்க்க,நான் அவரை பார்க்க...
அப்போது ஒருவர் டீ கொண்டு வந்தார்.
இவைகள் எல்லாம் எதற்கு என்று கேட்டேன் அவரிடம். நம்ம பசங்க எதாவது தேவைன்னா அவங்களுக்கு உடனே கிடைக்காது. அதான் மொத்தமாக வாங்கி வச்சிருக்கோம் என்றார்.
சிறிது நேரத்தில் சீமான் வந்தார்.
விஷயத்தை சொன்னேன்.
நல்லக்கண்ணு விழாவுக்கு வராமல் இருக்க இயலுமா?!. கட்டாயம் வருகிறேன். எனது பெயரை போட்டுக் கொள்ளுங்கள்.சரியாக வந்து விடுகிறேன் என்றார்.
நல்லது என்று அங்கு இருந்து 5 நிமிடத்தில் கிளம்பிச் சென்றோம்.
இரவில் தூக்கம் வரவில்லை.
அப்போது சீமான் யார்? தினத்தந்திக்கு,குருமூர்த்தி,சோவுக்கு என்ன உறவு என்று சிலரிடம் விசாரித்த பிறகு மனம் ஆறுதல் அடையவில்லை.
சிவந்தி ஆதித்தன் அவர்களிடம் பேசினேன்.காலை அவர்கள் வீட்டுக்கு வரச் சொன்னார்கள். காலை 7.30 சென்றேன்.
இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்துகிறேன் என்று சொல்லி சீமானுக்கும், தினத்தந்திக்கும் தொடர்பு உண்டா?. ஏன் சி.பா.ஆதித்தனார் தொடங்கிய நாம் தமிழர் இயக்கத்தை அவருக்கு கொடுத்து இருக்கிறீர்களே! அதற்கு காரணம் ஏதும் உண்டா என்று கேட்டேன்.
சோ எனது நண்பர்.
குருமூர்த்தி தினத்தந்தி ஆடிட்டர், ஆலோசகர்.
இருவரும் ஒரு நாள் என்னை சந்திக்க வந்து தமிழில் ஈடுபாடு உள்ள ஒரு பையன் சீமான் என்று நடிகராக இருக்கிறார். சினிமாவில் நடிப்பது அவருக்கு சரியாக வரவில்லை. அதனால் தமிழை வளர்க்க முயற்சி செய்கிறான்.
நாங்களும் உதவி செய்கிறோம், தங்களது அப்பா சி.பா.ஆதித்தனார் தொடங்கிய நாம் தமிழர் பெயரை எங்களுக்கு கொடுங்களேன் என்று கேட்டனர்.
எனது அப்பாவின் நாம் தமிழர் இயக்கம் பெயரை உபயோகப்படுத்தி கொள்ளுங்கள்.அதில் எனக்கு ஆட்சேபனை இல்லை என்று சொல்லி விட்டேன். உடனே சீமான் வெளியில் இருந்தவரை வரச் சொன்னார்கள். பார்த்தேன். என் காலில் விழுந்து ஆசி வாங்கினார்.
ஒரு சில நாடார் சமுதாய விழாவில் அவனை பார்த்து உள்ளேன். அவரின் வளர்ச்சிக்கு பணம் செலவு செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். எல்லாம் செய்தேன் என்றார் அண்ணன் சிவந்தி ஆதித்தன்.
இந்த சீமானின்,துப்பாக்கி,வீச்சு அரிவாள் என் மனதில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியது.
உடனே என் உடன் வந்தவரிடம் திருநெல்வேலியில் சீமான் அப்பாயின்ட்மென்ட் வாங்கி தந்த நண்பரிடம் சீமானை நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என்று சொல்லி விடுங்கள் என்றேன். என்ன அண்ணாச்சி இப்படி சொல்றீங்க என்று அவர் கேட்டார்.
இனி வேண்டாம் என்று தீர்க்கமாகவே சொல்லி நடிகர் சீமானை தாமிரபரணி விழாவுக்கு கேன்சல் செய்து விட்டேன்.
எனக்கு அப்போது சோ,குருமூர்த்தி மேசானிக் கன்ட்ரோலர் என்றும் பத்திரிக்கை டிரஸ்ட் நடத்த அண்ணன் சிவந்தி ஆதித்தன் அவர்கள் அதில் மேசானிக் மெம்பர் என்பதும் எனக்கு அப்போது தெரியாது.
சென்னையில் இருந்தே நெல்லைக் கண்ணனை அழைக்க நம்பர் வாங்கி அலைபேசியில் அழைத்தேன்.
தன்மையாகதான் என்னிடம் பேசினார்.
நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்றார்.
கட்டணம் எவ்வளவு தர வேண்டும் என்று கேட்டேன். தாமிரபரணி விழா என்பதால் உங்கள் விருப்பம் என்றார். சரி ஐயா...
ஊருக்கு வந்து தங்களை பார்க்கிறேன் என்றேன். இறுதியில் யார் எல்லாம் வருகிறார்கள் என்று கேட்டார் !
நான் உடனே V.சுந்தரம் IAS, நடராஜ் IPS என்று வரிசையாக கூறிய அடுத்த நிமிடம் நல்லக்கண்ணு விழாக்கு பாப்பாரப் பயல்களை கூட்டி உட்கார வைக்கிறீர்களே என்று போனில் பேச அந்த திமிர் பிடித்த,வயதுக்கு மரியாதை தெரியாத கயவன் நெல்லை கண்ணனையும் தாமிரபரணி நிகழ்ச்சியில் இருந்து புறக்கணித்து விட்டேன்.
4000 பேர் இருக்கையும் நிறைவு ஆகி 1000 பேர் சேர் இல்லாமல் நின்று இரு பக்க டாஸ்மாக் கடைகளை பற்றி கவலை படாமல் தாமிரபரணி நிகழ்ச்சி >அருமையாக நடைபெற்றது.
ஐயா நம்மாழ்வார் வந்திருந்து என்னை ஆசி அளித்தது மறக்க இயலாத ஓர் அனுபவ நிகழ்வு.
இதே நெல்லைக் கண்ணன்தான் இன்று பாரத பிரதமர் மோடிக்கு ஆண்மையற்ற எச்சரிக்கை விடுகிறார். இதனால் பிரச்சனை கூடுமா? குறையுமா ?.
குருமூர்த்தி பாணியில் சொன்னால் தமிழக பாஜக ஆண்மை அற்ற முண்டங்கள் ஆண்டாளை பேசிய போது இருந்த மாதிரியே இப்போதும் வாயில் பிளாஸ்டர் ஒட்டிக் கொண்டு உள்ளார்கள் என்றால் விஷயம் புரிகிறதா ?
நெல்லைக்கண்ணன், சீமான் இருவரையும் நான் அப்போதே கணித்த மதிப்பீடு சரியாகி விட்டது.
சினிமாவில் பேசுபவர்களும், அரசியலில் பேசுபவர்களும் இன்று மேசானியர்களின் எச்சில் பணத்திற்காகதான் வெட்கம் இன்றி வாழ்கிறார்கள் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்.
வேலும் மயிலும் உற்ற துணை
ஓம் முருகா
அன்புடன்
T.பாலசுப்ரமணிய ஆதித்தன்.
தவறாது பகிர்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக