ஞாயிறு, 31 மே, 2020

புலி ஆதரவாளர்களின் விபரீத வரலாற்று பிழை

வளன்பிச்சைவளன் : கடந்த 11 ஆண்டுக ளாக மே மாதம் என்றாலே கலைஞர் மீது புழுதி வாரி தூற்றுவது என்பதை ஒரு சம்பி ரதாயமாக நடைமுறை படுத்தி வந்தனர் போலி தமிழ் தேசியர் கள்.
தமிழீழம் என்ற ஒரு நாடு உலக வரைபடத்தில் இடம் பெற வேண்டும் என்று 1980 களில் ஒரு இயக்கமாக நடத்திய வர் கலைஞர் பட்டிதொட்டி எங்கும் ஈழத்தமிழர்களுக்கு தீர்வு தமிழீழமே என இறுதி யிட்டு தமிழகம் எங்கும் முழங்கி யவர் கலைஞர்.
கலைஞர் ஈழத் தமிழ் மக்களுக்காக எடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் முட்டுக் கட்டை போட்டவர்கள் புலிகள் அனைத்து இயக்கங்க ளும் புலிகளால் அழிக்கப் பட்ட நிலையில் கலைஞர் ஈழ பிரச்ச னையில் இருந்து ஒதுங்கினார். அப்பாவி ஈழத் தமிழ் மக்கள் கொல்லப் பட்ட போதெல்லாம் அவர்களுக்காக குரல் கொடுத் தார் கலைஞர்.

சர்வதேச நாடுக ளின் சமாதான முயற்சியையும் முறியடித்து வலுச் சண்டை இழுத்து இறுதி வரை உலகின் எந்த ஒரு நாட்டின் அங்கீகாரமும் பெற முடியாமல் மாறாக உலகின் பல நாடுகள் தடை செய்த போதும் அதை தடுக்க முயற்சிக்காது போரை துவக்கிய புலிகள் அனைத்து வாய்ப்புகளையும் புறம் தள்ளி போரிலும் இறுதியில் வெள்ளை கொடி தூக்கியதை சர்வதேச நாடுகள் முன் நிகழ்தாமல் அதையும் தவற விட்டு சிங்களவரை நம்பி சரணடை ந்து சிங்கள பேரினவாதிகளால் சர்வதேச நாடுகள் ஆதரவுடன் அழித்தோழிக்கப் பட்டார்கள்
உண்மை இவ்வாறு இருக்க, வேண்டும் என்றே தமிழகத்தில் அரசியல் ஆதாயம் வேண்டி ஆண்டு தோறும் பழுதி வாரி தூற்றுவது தொடர்கதை யானது தமிழீழத்தை ஆதரித்த திமுக தொண்டர்கள் கடந்த ஆண்டுகளில் அமைதி காத்தனர். இந்த ஆண்டு இறுதி யுத்த தோல்விக்கு அப் படுகொலை நிகழ்விற்கு புலித் தலைவர் பிரபாகரனே காரணம் என்ற உண்மையை புலிகளின் பாசிச செயல்பாட்டை அம்பலப் படுத்தினர்.
ஏறத்தாழ 36 ஆண்டுகள் புலிகளின் உண்மை யான பாசிச கோர முகத்தை மூடி மறைத்து அவர்களை வான ளாவ உயர்த்தி ஒரு உண்மைக்கு மாறான ஒரு பிம்பத்தை உருவாக்கி இருந்தனர் இந்த ஆண்டு அந்த பிம்பம் சுக்கல் சுக்கலாக உடைத்து நொறுக்கப் பட்டது.
புலிகளின் அழிவிற்கு காரணமான நெடுமாறன் , கலைஞரால்
இனத்துரோகி என்று அடையாளம் காட்டப் பட்ட ஈழச் சகுனி நெடுமாறன் #பெரியார் இன்று இருந்து இருந்தால் பிரபாகரனை தனது பேரன் என அழைத்து இருப்பார் என்று புதிதாக ஞானோதயம் பெற்று பிரபாகரன் பிம்பம் நொறுங்கு வதை கண்டு சகிக்க முடியாமல் பெரியார் புகழ் பாடி பின் பிரபாகரன் பேரன் என்கிறார் இவர் எப்படி பட்ட யோக்கியர் இவர் நிர்வகித்து வரும் முள்ளி வாய்க்கால் முற்றத்தில் தமிழக த்தை சேர்ந்த பலர் படம் இடம் பெற்றிருக்கும் ஆனால் பெரியார் படம் அங்கு இல்லை இன்று இவர் திமுக தொண்டர் கள் தாக்குதலால் நிலை குலைந்து இன்று பிரபாகரனை காக்க வேண்டி பெரியாரை புகழ் கிறார்.
விடுதலைப் புலிகளின் மதவெறியாட்டத்தை, தாங்கள் மட்டுமே யோக்கியர் மற்றவர் எல்லாம் அயோக்கியர் என்ற மனபிரழ்வு நோயாளிகளை தமிழகத்தில் புத்தர்களாக புனிதர்களாக சித்தரித்து ஒரு வரலாற்று கரையை சுமந்து நிற்கின்றனர். புலி ஆதரவு பெரியாரிக்கவாதிகள். புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் தனது பேட்டியில் ராஜீவ் கொலைக்கு தாங்கள் காரணம் என்றும் அதை மன்னிக்க மறக்க கோரி னார்.
அன்டன் பாலசிங்கம் ஒத்துக் கொண்டாலும் இந்த புலி ஆதரவு பெரியாரியவாதி கள் புலிகளுக்கும் ராஜீவ் கொலை க்கும் தொடர்பு இல்லை என ஆணித்தரமாக வாதாடி புத்தகம் வெளியிடு வார்கள் இன்று வரை முகநூலில் புலிகள் காரணம் இல்லை என வாதிடவும் செய் கிறார்கள்.
சரி இது அவர்கள் நிலைப்பாடு. பெரியார் பெயரில் இயக்கம் நடத்துபவர் கள் திட்டமிட்டு பெரியார் படத்தை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வைக்காமல் இருந் தாலும் அங்கு நடக்கும் மாவீரர் நாளில் இவர்கள் கலந்து கொள்வார்கள் பெரியாரை புறக் கணித்தாலும் இவர்களின் புலிபோதை அங்கு செல்ல வைக்கிறது, அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.
புலி ஆதரவு பெரியாரி யவாதிகள் 1984 - 87 காலக் கட்டத்தில் புலிகள் இந்திய ஆதரவுடன் தமிழகத்தில் இருந்த காலக் கட்டத்தில் அவர்களோடு பழகியவர்கள் புலிகளால்
பயன் படுத்தப்பட்டவர்கள்
மறந்தும் கூட திராவிட சித்தாந்த ங்களை புலிகளுக்கு சொல்ல எண்ணாதவர்கள் புலிகளின் ஏவல் பணி புரிந்ததில் பெருமை கொள்ளும் சுயமரியாதை காரர்கள். இவர்களது வாழ்நாள் சாதனையாக புலிகளுக்கு ஏவல் புரிந்ததை எண்ணி பெருமை கொள்கின்றனர் தங்களது பெருமை நிலைக்க பிரபாகரன் பிம்பம் உயர்த்தி பிடிக்கப் பட வேண்டும் என அங்கலாய்கின் றனர்.
சரி அவர்கள் தற்பெருமைக்கு நாம் குறுக்கே நிற்கப் போவதில்லை. கவிஞர் காசிஆனந்தன் கவிதைகள் ஒரு கவிதை நீங்கலாக அனைத் தும் புலிகளின் இணையதளத் தில் உள்ளது ஒரு பாடல் பட்டும் இல்லை அது அவர் பெரியார் பற்றி எழுதிய "பெரியார் ஒருவரே பெரியார்" என்ற பாடல் இது தான் பெரியார் குறித்த புலிகளின் பார்வை
தொழிற் புரட்சி காரணமாக ஆலைகள் இயங்க போக்குவரத்திற்கு தடையாய் இருந்ததால் தீண்டாமை பாவம் என முதலாளித்துவம் தேவைக்கு ஏற்ப சாதியை எதிர்க்க வில்லை தீண்டாமயை மட்டும் எதிர்த்தது
இதைப் போலவே புலிகள் இயக்கத்திற்கு ஆட்கள் தேவை என்ற அடிப்படையில் இயக்கத்தில் சாதி மறுக்கப் பட்டது தேவையை ஒட்டி. புலிகளின் அரசியல் துறை சாதி எதிர்ப்பு பிரச்சாரம் மக்களிடம் செய்தவை, பொதுமக்களை கலப்பு மணத்திற்கு ஊக்குவித்தது கலப்பு மணம் முடித்து வைத்ததாக ஒரு செய்தி கூட இல்லை
முஸ்லீம்களுக்கு கெதிரான பாசிச நடவடிக்கைகள் என பெரியாரி யத்திற்கு துளியும் சம்மந்தம் இல்லாதவர்கள் புலிகள்.
புலி ஆதரவு பெரியாரி யவாதிகளே தங்கள் புலிப் புகழ்ச்சி தங்கள் தனியுரிமை எங்களது பணிவான வேண்டு கோள் பெரியாரியவாதிகள்
பார்வையில் புலிகள் என்ற நிகழ்வில் தயுவு செய்து பாசிச புலிகளை மனிநேயர் பெரியாரு டன் ஒப்பிட்டு விடாதீர்கள்.
மற்றபடி புலி புகழ் பாடுங்கள் அது தங்கள் விருப்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக