ஞாயிறு, 31 மே, 2020

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 12,500 ரூபாய் வழங்குக'- திமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

 Rs. 12,500 for each family - Resolution at DMK Advisory Meetingnakkheeran.in - கலைமோகன் : திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக தோழமை கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்றது. காணொலி மூலமாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் நீட் ஒதுக்கீடு,  கரோனா  தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, கொமதேக ஆகிய திமுகவின் தோழமை கட்சிகளும் பங்கு பெற்ற நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு சார்பில் 7,500 ரூபாயும், மாநில அரசு சார்பில் 5000 ரூபாய்  என ஒவ்வொரு குடும்பத்திற்கும் 12,500 ரூபாய் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக