ஞாயிறு, 31 மே, 2020

இனி வருஷத்துக்கு நாலு படம் தான் தியேட்டர்ல ரிலீஸ்.. மீதி எல்லாம் OTT தான்..

cinemapettai.com g -ஸௌந்தர் : தமிழ் சினிமாவில் இனி வரும் காலங்களில்
வருடத்திற்கு நான்கு முதல் ஐந்து படங்கள் மட்டுமே தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதாகவும், மீதி உள்ள படங்கள் அனைத்துமே OTT நிறுவனங்களுக்கு விற்று விடுவதாகவும் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது.
OTTதளத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தி வெளியான திரைப்படம் சூர்யா தயாரித்த பொன்மகள் வந்தாள். ஜோதிகா, பார்த்திபன் என பல நட்சத்திரங்கள் அந்த படத்தில் நடித்துள்ளனர். தற்போது வரை இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்து வருகின்றன.
அதுமட்டுமில்லாமல் அமேசான் நிறுவனத்தில் முதல் நாளே இந்த படத்திற்கு நல்ல லாபம் கிடைத்ததாக தெரிகிறது. இதனால் அவர்களும் உற்சாகத்தில் உள்ளனர். இதனால் இனி சிறு பட்ஜெட் படங்கள் அனைத்துமே OTT தளங்களுக்கு விற்கப் போவதாக தயாரிப்பாளர்கள் முடிவு எடுத்துள்ளார்களாம்.

அதனால் இனி தமிழ் சினிமாவில் பெரும்பாலும் விஜய், அஜித், ரஜினி, கமல், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களை தவிர பெரும்பாலான படங்கள் இனி தியேட்டரில் வெளியாகும் அதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்கிறது கோலிவுட் வட்டாரம். ஒரே கொட்டகை பாபு, இனி பார்க்கிங், கேன்டீன் கட்டண வசூலுக்கு எல்லாமும் ஊ ஊ ஊ..
இதற்குக் காரணம் பொன்மகள்வந்தாள் படம் அமேசன் பிரைமில் பெரிய வரவேற்ப்பை பெற்றது தான் எனவும் ஒரு குரூப் கூறி வருகிறது. மேலும் பெரிய பட்ஜெட் படங்களை இனி தயாரிக்க அனைவரும் யோசிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இனி நடிகர் நடிகைகளின் சம்பளம் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் செய்திகள் கிடைத்து வருகிறது.
ஆகையால் இனி அனைவரும் வீட்டிலிருந்தபடியே படங்களைப் பார்த்து பழகி கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக