வெள்ளி, 8 மே, 2020

டாஸ்மாக் நிறுவனத்துக்கு சாராயம் வழங்குவோர் பட்டியல் .. .. விபரம்

Home
https://www.tasmac.co.in/index.php

Tamilnadu State Marketing Corporation Ltd. Suresh V O : டாஸ்மாக் நிறுவனத்துக்கு சரக்கு சப்ளை ஆவதே திமுகவினர் நடத்தும் ஆலைகளில் இருந்து தான். . .
காவிகளால் உருவாக்கப்பட்டு, நடுநிலைநக்கி & தமிழ்தேசியங்களால் பரப்பப்படும் எத்தனையோ WhatsApp குப்பைகளில் இதுவும் ஒன்று.
அப்படியா என்று தேடி பார்த்ததில் இன்று தெரிந்துக்கொண்டது இது.
Homeடாஸ்மாக் நிறுவனம் மொத்தம் 18 நிறுவனங்களிடம் இருந்து தனக்கு தேவையான சரக்கை வாங்குகிறது. விவரமான பட்டியலின் இணைப்பு மறுமொழியில் இருக்கிறது.
அவை எவை, அந்நிறுவனங்களுக்கு யார் உரிமையாளர் என்ற பட்டியல் இணைக்கப்பட்டிருக்கிறது.
இதில் Accord Breweries & Distilleries நிறுவனத்தின் உரிமையாளர் திரு.S.ஜெகத்ரட்சகன் மட்டுமே திமுகவை சேர்ந்தவர்.
டாஸ்மாக் கொள்முதல் செய்வதென்னவோ 18 நிறுவனங்களில் இருந்து, திமுகவை சேர்ந்தவர் என்னவோ அதில் ஒரே ஒரு நிறுவனத்துக்கு தான் உரிமையாளர்.

அடுத்ததாக இப்பட்டியலில் குற்றவாளி ஆக்கப்படுபவர் கலைஞரின் உளியின் ஓசை படத்தின் தயாரிப்பாளரும் SNJ Breweries & Distilleries நிறுவனத்தின் உரிமையாளருமான திரு.S.N.ஜெயக்குமார்.
அவர் திமுகவின் பினாமி என்று குற்றம் சொல்பவர்கள் தான் அதை நிரூபிக்க வேண்டுமே தவிர திமுக இதில் நிரூபிக்க ஏதுமில்லை.
இதில் சம்மந்தமே இல்லாமல் தொடர்ந்து விமர்சனத்துக்கு ஆளாகிறவர் திமுக மக்களவை உறுப்பினர் திரு.டி.ர்.பாலு அவர்கள்.
அவர் மகன்களுக்கு சொந்தமான Kings Chemicals & Distilleries நிறுவனம் தயாரிப்பது என்னவோ Acetic Acid, Acetic Anhydride & Ethyl Acetate தான். நிறுவனத்தின் பெயரில் Distilleries இருப்பதால் இந்நிறுவனமும் சாராயம் தான் தயாரிக்கிறது என்று அளப்பறையை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
என்றாவது ஒரு நாள் யாரேனும் இந்த கேள்வியை திரு.டி.ர்.பாலுவிடம் நேரில் கேட்க வேண்டும், கேட்பவரை பாலு தன் ட்ரேட் மார்க் கோபத்துடன் அடித்து துவைக்க வேண்டும், அதை நாமெல்லாம் பார்க்க வேண்டும்.
சரி திமுகவுக்கு தான் இல்லை, அதிமுகவுக்கேனும் பல நிறுவனங்கள் இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை.
சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான MIDAS நிறுவனம் மட்டும் தான் பட்டியலில் இருக்கிறது. இப்போது சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் வேறு தொடர்பில்லை.
இந்த தகவல்களை கண்டுபிடிக்க எந்த ஒரு கடினமான முயற்சியும் எனக்கு தேவைப்படவில்லை. சரியான தகவல்கள் அடங்கிய தளத்தை எளிதான இணையத்தேடல் மூலம் கண்டடைவதே போதுமானதாக இருக்கிறது. இதை கூட செய்யாமல் பலர் கூத்தாடுவதை பார்த்தால் தான் பரிதாபமாக இருக்கிறது.
ஆக. . .திமுக, அதிமுக கட்சிக்கு சொந்தமான நிறுவனங்கள், பினாமிகள் என்று சொல்வோர் தங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கொண்டு வரவேண்டும்.
லிங்க்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக