வியாழன், 7 மே, 2020

சொந்த மாநிலங்களுக்கு நடந்தே சென்ற 42 புலம்பெயர் தொழிலாளர்கள் சாலை விபத்துகளில் பலி

42 migrant workers died in road accidents when trying to return home during lockdown tamil.oneindia.com/:;இந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதும் மொத்தம் 140 பேர் சாலை விபத்துக்களில் இறந்தனர். இந்த இறப்புகளில் 30% பேர் நடந்து சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள். அல்லது பேருந்துகள் மற்றும் லாரிகளில் ஒளிந்துகொண்டு தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முயன்றவர்கள்.
லாக் டவுனின் இரண்டு கட்டங்களில் நாடு முழுவதும் 600 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக அறிக்கை கூறுகிறது. புலம்பெயர்ந்த 42 தொழிலாளர்கள் தவிர, 17 அத்தியாவசிய தொழிலாளர்களும் சாலை விபத்துக்களில் இறந்தனர்.
"பல மாநிலங்களிலிருந்து எங்களுக்கு இன்னும் உரிய பதில்கள் கிடைக்காததால் இந்த எண்களை குறைந்தபட்ச எண்களாகத்தான் கருத வேண்டும்" என்று சேவ் லைஃப் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி பியூஷ் திவாரி கூறினா

டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், அசாம், கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு ஆகிய 9 மாநிலங்களில் விபத்துகளில், 140 பேர் உயிரிழந்துள்ளனர். லாக்டவுனின்போது சாலை விபத்துக்களில் அதிகம் பேர் பலியான மாநிலம் பஞ்சாப். அதைத் தொடர்ந்து கேரளா, டெல்லி மற்றும் கர்நாடகா இருந்தன.
"ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துக்கள் இந்தியாவில் நடக்கின்றன. லாக்டவுன் காலத்தில் இறப்பு எண்ணிக்கையில், சரிவு காணப்பட்டாலும், 600 விபத்துகளில் 140 இறப்புகள் என்பது, மோசமானது. நமது சாலைகளின், இன்ஜினியரிங் தவறுகளை சரிசெய்ய லாக்டவுன் காலத்தை அரசுகள் பயன்படுத்த வேண்டும். இதனால் லாக்டவுன் முடிந்ததும், சாலை விபத்துக்களை குறைத்துவிடலாம் " என்று திவாரி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக