புதன், 6 மே, 2020

ஆவேசத்தில் தனது ஆணுறுப்பை தானே வெட்டி சிவலிங்கத்துக்கு படைத்த கொடூர பக்தி

திடீரென எழுந்து.. கரகரவென கத்தியால் “அதை” அறுத்து.. “சிவனுக்கு படையல் வைக்க போறேன்” பதற வைத்த விஷ்ணு tamil.oneindia.com ›போபால்: விஷ்ணு சிங் என்ற கைதி, திடீரென தனது ஆணுறுப்பை “கட்” செய்து கொண்டு, அதை கொண்டு போய் சிவலிங்கத்திற்கு படையல் வைக்க முயன்றுள்ளார்..
ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த அவரை மீட்டு போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குவாலியர் மாவட்டத்தை சேர்ந்தவர் விஷ்ணு சிங்.. இவர் ஒரு கைதி.. குற்ற செயலுக்காக 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, ஜெயிலில் உள்ளார்
இந்நிலையில், காலை 6.30 மணி இருக்கும்… அப்போது திடீரென தனது ஆணுறுப்பை அவரே அறுத்து கொண்டு, சிவலிங்கத்திற்கு படைத்து கும்பிட முயன்றார்.. ஆனால் சிறிது நேரத்திலேயே ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார்.

இந்த தகவலறிந்து போலீசார் விரைந்து சென்று அந்த கைதியை உடனடியாக மீட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. தற்போது அவருக்கு தீவிர சிகிச்சையும் நடந்து வருகிறது.
இந்த சம்பவம் குறித்து குவாலியர் மாவட்ட சிறைத்துறை கண்காணிப்பாளர் சொல்லும்போது, “ஜெயிலுக்குள் சிவன் கோயில் உள்ளது.. அந்த கோயில் முன்பாகதான் கைதி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்… அவர் பெயர் விஷ்ணு சிங்..

அவரை மீட்டு சிறை வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தோம்.. அப்போதுதான் அவர் தனது ஆணுறுப்பை வெட்டி கொண்டது தெரியவந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில், “என்னுடைய கனவில் சிவன் தோன்றியதாகவும், அவருடைய ஆணுறுப்பை அறுத்து காணிக்கையாக படைக்குமாறு சொன்னதாகவும் தெரிவித்தார்.
சிவன் சொல்லியதால்தான் இந்த முடிவை விஷ்ணு சிங் எடுத்ததாக கூறுகிறார். இருந்தாலும் இவர் ஒரு கொலை குற்றவாளி, மோசடியும் செய்திருக்கிறார்.
அதற்காக கோர்ட்டில் இரட்டை தண்டனையை பெற்று அனுபவித்து வருவதால், ஜெயிலுக்குள்ளேயே இவரை யாராவது கொல்ல முயன்றார்களா என்றும் விசாரித்து வருகிறோம்” என்றார்.

ஜெயிலுக்குள்ளேயே கைதி ஒருவர் ஆணுறுப்பை வெட்டி, சிவலிங்கத்துக்கு காணிக்கை தர முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் தந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக