ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

கொரோனா வைரஸ் Rapid test kid ரேபிட் டெஸ்ட் கருவி தமிழகம் வராத பின்னணி.. மத்திய அரசு கையப்படுத்தி விட்டது?

By Velmurugan P   -  /tamil.oneindia.com  :  சென்னை: சீனாவில் இருந்து தமிழக அரசு வாங்க உள்ள ரேபிட் டெஸ்ட் கருவியால் ஆரம்ப நிலைலேயே கொரோனா
பாதிப்பை கண்டறிய முடியுமா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு உடலில் அதற்கு எதிரான எதிர்ப்பு புரதம் உருவாகி இருந்தால் மட்மே கண்டுபிடிக்க முடியும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் இந்த கருவி தமிழகத்திற்கு பலன் தருமா என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கண்டறிய 12 அரசு மருத்துவமனைகள் மற்றும் 7 தனியார் மருத்துவமனைகள் என மொத்தமே 19 இடங்களில் தான் கொரோனா பரிசோதனை கூடங்கள் உள்ளன. இந்த பரிசோதனை மையங்கள் மூலம் ஒரு நாளைக்கு 700 பேருக்குத்தான் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனை முடிவுகள் வருவதற்கும் காலதாமதம் ஆகிறது.
 50 ஆயிரம் கிட்டுகள் இதனால் நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே கொரோனா நோய் தொற்றை 30 நிமிடத்தில் கண்டறிய கூடிய தேரபிட் டெஸ்ட் கிட்டை சீனாவிடம் இருந்து வாங்க தமிழக அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. முதற்கட்டமாக 50 ஆயிரம் கிட் தமிழகம் வருவதாக கூறப்பட்டது. ஆனால் அந்த கருவிகளை மாநில அரசுகள் நேரடியாக வாங்க தடை விதித்தது

அமெரிக்காவுக்கு சென்றது ....   து இதைத்தொடர்ந்து மத்திய அரசு சார்பில் 10 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் வாங்கும் கருவிகள் தான் தமிழகத்திற்கு பிரித்து தரப்படும் என்றும் தற்போது தமிழகத்திற்கு வரும் கருவியையும் மாநிலங்களுக்கு நாங்கள் தான் பிரித்து தருவோம் என்று மத்திய அரசு தெரிவித்தது. மத்திய அரசின் அறிவிப்பால் குழப்பம் ஏற்பட்ட நிலையில் தமிழகத்துக்கு வர வேண்டிய கருவிககளை சீன ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகத்திற்கு ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
நோய் எதிர்ப்பு புரதம் இது ஒருபுறம் எனில் சீனாவின் ரேபிட் டெஸ்ட் கிட் கருவியால் ஆரம்ப நிலையிலேயே கொரோனா பாதிப்பை கண்டறிய முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் கொரோனாவுக்கு எதிராக ஒருவருக்கு உருவாகும் நோய் எதிர்ப்பு புரதத்தை வைத்து தான் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் கண்டுபிடிக்க முடியும். ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஆரம்ப நிலையில் ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு புரதம் உருவாகாமல் இருந்தால் கண்டுபிடிக்க முடியாது. தற்போது மேற்கொள்ளப்படும் பிசிஆர் டெஸ்ட் படி ஒருவருக்கு கொரோனா அறிகுறி இல்லை என்றாலும் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் மிககுறைவாகவே சோதிக்க முடியும்
சோதிக்க அவசியம் தற்போதைய நிலையில் கொரோனா நோய் அறிகுறி ஒருவருக்கு 5 நாளுக்கு பிறகே தெரிகிறது. எனவே 7 நாளுக்கு பிறகு ரேபிட் கிட் மூலம் சோதித்தால் முடிவுகள் தெரிந்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே இந்த கிட் இருந்தால் மிக விரைவாக பல ஆயிரம் பேருக்கு சோதனை செய்து கண்டுபிடித்துவிட முடியும். எவ்வளவு விரைவாக இக்கருவிகள் தமிழகம் வருகிறதோ அவ்வளவு விரைவாக சோதனையை விரிவுப்படுத்த முடியும். நோய் பாதித்த பலரையும் கண்டுபிடித்துவிட முடியும். எனினும் இந்த கருவிகள் ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை பரிசோதித்து வாங்க வேண்டும் என்கிறார்கள். ஏனெனில் சீன பொருட்கள் அனைத்துமே தரமானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது என்பதால தரத்தை சோதித்தே வாங்க வேண்டியது அவசியம். ஐரோப்பாவில் பல நாடுகள் பரிசோதித்து இந்த கருவியை வாங்காததால் கருவிகள் சரியில்லை என்று சீனாவை குற்றம்சாட்டி வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக