ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

வங்காள தேசத்தில் முஜிபர் ரஹ்மான் கொலை குற்றவாளிக்கு நள்ளிரவில் தூக்கு நிறைவேறியது முன்னாள் இராணுவ அதிகாரி


வங்காள தேசத்தில் முன்னாள் இராணுவ அதிகாரிக்கு நள்ளிரவில் தூக்கு தண்டனை நிறைவேற்ற  தினத்தந்தி : வங்காள தேசத்தின் தேசத் தந்தை என்று அழைக்கப்பட்ட முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான முன்னாள் இராணுவ அதிகாரிக்கு நள்ளிரவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. டாக்கா< வங்காள தேசத்தின் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையும், அந்நாட்டின் முதல் அதிபருமான ஷேக் முஜிபுர் ரஹ்மான் கடந்த 1975-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.இவர் தவிர மேலும் 4 தலைவர்களை கொன்ற வழக்கில் குற்றவாளியான முன்னாள் ராணுவ அதிகாரி அப்துல் மஜித், இந்தியாவில் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து வங்காள தேசம் திரும்பிய அவரை டாக்கா போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். அவருக்கு ஏற்கன்வே மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால், எப்போதும் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை நள்ளிரவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்நாட்டு மத்திய சிறையில் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக