திங்கள், 6 ஏப்ரல், 2020

ஈழத்தமிழர்கள் தமிழக அரசியல் பற்றி அக்கறை கொண்டுள்ளார்களா? சமுகவலையில் ..

Yasser AK : இலங்கை தமிழர்கள் மீது எனக்கு எந்த வன்மமும் இல்லை. ஆனால் நெடுங்காலமாக என் மனதில் ஒரு சந்தேகம். இங்கே தமிழகத்தில் இருந்து கொண்டு ஈழத்தில் அவர்கள் நலம் பெற இந்திய அளவில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாம் மெனக்கெடுவது போல ஒரு நாளேனும் இங்கே உள்ள தமிழர்கள் நலம்பெற யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் செயல்பட்டதுண்டா?

 Ravishankar Ayyakkannu அவர்கள் புத்திசாலிகள். 1

ராதா மனோகர் : இலங்கை தமிழர்களின் அரசியல் அபிப்பிராயங்கள் என்று தமிழகத்தில் கருதி கொண்டு இருப்பது புலிகளின் அபிப்பிராயங்களையே . புலிகள் ஒரு தாலிபன் போன்ற அமைப்பு 
அந்த அமைப்புக்குள் இலங்கை தமிழர்களை சிக்க வைத்தது எம்ஜியாரும் நெடுமாறன் வைகோ மற்றும் கொளத்தூர் மணி போன்ற பல் திராவிட இயக்கத்தவர்களும் தான் .. 
புலிகளின் சகோதர படுகொலைகளை கண்டித்து அதன் பின் புலிகளை ஆதரிப்பதை தவிர்த்து கொண்ட ஒரே தலைவர் கலைஞர்தான் . 
அன்று 86 இல் மதுரை டெசோ மாநாட்டில் திரண்ட ஈழ ஆதரவு சக்திகளை கண்டு பயந்த எம்ஜியார் இந்த ஈழ ஆதரவு சக்திகள் கலைஞருக்கு பெரிய எழுச்சியை கொடுத்து விடும் என்ற ஒரே நோக்கத்தில் , அந்த மாநாடு நடந்த ஒரே வாரத்தில் புலிகள் மூலம் ஈழத்தில் சகோதர படுகொலைகளை அரங்கேற்றினார் புலிகளுக்கு பின்னால் இருந்து கொண்டு அந்த கொலை வெறிக்கு முழு ஆதரவும் கொடுத்தது எம்ஜியார் .
இதன் பின்பு நடந்தது எல்லாமே புலிகளின் பின்வாங்கல் தான் .
அதன் பின்பு ராஜீவ காந்தி தலைய்ட்டு புலிகளுக்கு மறுவாழ்வு கொடுத்தார் . அந்த எபிசொட் முடிந்த பின்பு கூட புலிகள் ஓயவில்லை அவர்கள் திமுகவை வைகோ மூலம் கைப்பற்றவும் திட்டம் போட்டனர் . ..

 மத்திய உளவு துறை கலைஞரை எச்சரித்ததால் வைகோவை வெளியேற்றி திமுகவை கலைஞர் காப்பாற்றினர் .
இது பற்றி எல்லாம் பொதுவில் ஈழ தமிழர்களுக்கு தெரியாது அல்லது பயத்தால் தெரியாது போன்றே வாழ பழகி விட்டனர். ஏனெனல் புலிகள் இயக்கம் எல்லோரையும் அச்சுறுத்தும் அளவுக்கு பூதாகரமாகி விட்டிருத்தது..

இலங்கை தமிழர்கள் இந்தியாவை பற்றி அல்ல கலைஞர் பற்றி கூட விடயம் தெரியதவர்கள் ஆகத்தான் பெரிதும் இருக்கிறார்கள்
இதில் முக்கிய குற்றவாளிகள் யாரென்றே பட்டியல் தயாரித்தால் தமிழகத்தில் புலி புராணம் பாடியவர்களையே அதிகம் சேர்க்க வேண்டும் . தமிழ் தேசியர்களோடு திராவிட இயக்கத்தவர்களும் குற்றவாலி கூண்டில் இருக்கிறார்கள் .
இவர்கள்தான் திமுகவை ஈழத்தமிழர்களின் எதிரியாக காட்டியதில் பெரும் பங்கு வகித்தவர்கள்
 இப்போதுதான் ஈழ தமிழர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தமிழக இந்திய அரசியலே புரிய ஆரம்பித்து இருக்கிறது .
அதிலும் ஒரு வேடிக்கை இன்றும் கூட புலி பிராண்ட் காவிக்கொண்டு வருவோருக்கு கிடைக்கும் மரியாதையை உண்மையை பேசும் ஈழ தமிழருக்கு கிடைப்பதில்லை இந்த விடயத்தில் திமுக தொண்டர்களிடையே கூட கலைஞர் தோற்றுத்தான் போனர்.
கலைஞர் வாழ்வு முழுவதும் நன்மை செய்து துன்பம் வாங்குவதே வரலாறு ஆகி விட்டது



Ravishankar Ayyakkannu : இந்தியாவில் தமிழ்நாட்டவர் மக்கள் தொகை 6% தான். தமிழ்நாட்டுக்கும் மத்திய அரசுக்கும் எவ்வளவோ முரண்கள் உள்ளன.
அவற்றைப் பேச்சுவார்த்தை மூலமும் சட்டம் இயற்றியும் தான் தீர்க்க முடியும்.
மாறாக,
"யாரையும் நம்ப மாட்டோம்!
தமிழ்நாட்டவர் மட்டுமே வாக்களித்து,
முழுக்க முழுக்க தமிழ் பிரதமர், தமிழ் குடியரசுத் தலைவர், தமிழ் அமைச்சர்களைக் கொண்டு ஆட்சி அமைப்போம்" என்று சொன்னால்
"யாரடா, இவன் பைத்தியம்" என்று சிரிக்க மாட்டார்களா?
வடவர் வேறு தமிழர் வேறு என்று அறிந்த அண்ணா திராவிட நாடு கேட்டார்.
அது நடைமுறைக்கு ஒவ்வாத போது,
கலைஞர் மாநில சுயாட்சி கேட்டார்.
அதுவும் முடியாத போது, சல்லிக் கட்டுக்குச் செய்தது போல் தனிச்சட்டங்கள் இயற்றிக் கொண்டோம்.
தமிழ்நாடு இந்தியை எதிர்த்த போதும், இட ஒதுக்கீட்டுக்குக் குரல் கொடுத்த போதும்,
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் பயன் பெற்றன.
நமக்கும் எல்லையோர கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிங்களுக்கும் எவ்வளவோ வாய்க்கால் வரப்பு தகராறுகள் இருக்கலாம்.
ஆனால், மாநிலங்கள் வலுப்பெற வேண்டுமானால் அவர்களோடு இணைந்து அரசியல் செய்ய வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து,
தேசிய அளவில் மாநிலக் கட்சிகளோடு இணைந்து பல கூட்டணிகளை அமைத்தோம்.
வடவர்கள் நமக்கானவர்கள் இல்லை தாம். ஆனால், அவர்களுள் யார் கூடுதலாக மக்களாட்சி நடைமுறைகளை மதிப்பவர்கள் என்று பார்த்து காங்கிரசோடு கூட்டணி கண்டோம்.
இலங்கையில் உள்ள தமிழர்களைக் காட்டிலும்,
தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் நல்வாழ்வு வாழ இந்த நடைமுறை அரசியல் அறிவும் நேர்மையுமே காரணம்.
கூட்டுறவு, பேச்சுவார்த்தை, குறைந்த பட்ச செயல் திட்டம், உடன்பாடு, சட்ட திட்டங்கள் என்பதன் வாயிலாகவே வெற்றிகரமான அரசியலை முன்னெடுக்க முடியும்.
தூய அரசியல்வாதம் பேசுகிறவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவே செய்வார்கள்.
இப்போது தமிழ்நாடு, இந்தியா என்பதற்குப் பதில்
பட்டியல் வகுப்பினர், சாதி என்று பொருத்திப் பாருங்கள்

1 கருத்து:

  1. ஐக்கிய இந்தியாவில் - தமிழகத்தில்
    தமிழை ஆட்சி மொழியாகப் பேணும்
    தமிழக மக்களிடையே நற்றமிழைப் பேணும்
    தமிழர் கலை, பண்பாட்டை உலகறியச் செய்யும்
    தமிழக அரசைத் தான்
    ஈழத் (இலங்கைத்) தமிழர் எதிர்பார்க்கின்றனர்.
    உலகத் தமிழரும் அதனையே எதிர்பார்க்கின்றனர்.

    http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html

    பதிலளிநீக்கு