புதன், 22 ஏப்ரல், 2020

மருத்துவரின் உடலை தகனம் செய்வதில் கிறிஸ்தவ மத குழு சண்டையா?

டாக்டர் உடம்பு கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவ கல்லறைக்கே எடுத்துட்டு போகலையாம். இடம் பற்றாக்குறையால அங்க யாரையும் புதைக்குறது இல்லயாம். அங்க இருந்து அற கிலோ மீட்டர் தள்ளி மாநகராட்சி இடுகாடு ஒன்னு இருக்காம்.அங்கதான் எடுத்துட்டு போனாங்களாம்,அங்க தான் சண்டையாம். இந்த கல்லறை ட்ரஸ்ட்டோட தலைவர் போட்டு இருக்காரு. மீடியா ஒழுங்கா கவர் பண்ண கூடாதா?

Shalin Maria Lawrence : நேற்று மருத்துவரின் உடல் அடக்கம் செய்ய மறுக்கப்பட்ட பிரச்சனை கிறிஸ்தவ மதத்திற்கும் இருக்கும் குழு சண்டை என்று சங்கீகள் காலையிலிருந்து வாட்ஸ் அப்பில் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
அதில் கீழ்ப்பாக்கம் சிஎஸ்ஐ கல்லறை எனவும் இறந்த மருத்துவர் கத்தோலிக்கர் என்பதால் அவரை அங்கு புதைக்க விடாமல் கோஷ்டி மோதல் ஏற்பட்டது என்று உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே மக்களுக்காக உழைத்த மருத்துவர்களுக்கு கண்ணியமான விதத்தில் இறுதிசடங்கு செய்யப்படவில்லை என்பது வருத்தத்தை கொடுக்கும் பொழுது இதை வைத்து மிக மிக மலிவான இழிவான அரசியலை முன்னெடுக்கும் சங்கிகளின் போக்கு அராஜகம் ஆனது.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் கீழ்ப்பாக்கம் கல்லறை கத்தோலிக்கர்கள் உடையது ஆனால் ஆதியிலிருந்தே அங்கே கத்தோலிக்கர்கள் அல்லாத சிஎஸ்ஐ கிறிஸ்தவர்களும் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
மிகமிக சமத்துவமான கல்லறை அது. அங்கே கிறிஸ்தவத்தில் பிரிவு மட்டுமல்ல ஜாதிப் பிரிவும் கிடையாது எல்லோரும் அடக்கம் செய்யப்படுவார்கள்.
என் உறவினர்களே பலர் அங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் RC தான்.

அதுமட்டுமல்ல காலம் காலமாக டாக்டர் சைமனின் குடும்பமும் அங்கேயேதான் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. கல்லறை எல்லாம் குடும்பம் குடும்பமாக ஒரே கல்லறை தான்.
அதுமட்டுமில்லாது கல்லறையில் புதைப்பது என்பது அங்கு கல்லறையில் அறங்காவலர்கள் பொருத்தது. கீழ்ப்பாக்கத்தை பொறுத்தவரை அங்கு அறங்காவலர்கள் எல்லோருமே கத்தோலிக்கர்கள் தான்.
ஆக டாக்டர் சைமன் அவர்களை புதைப்பதற்கு அங்கு எந்த தடையும் இல்லை.
ஆனால் அம்பத்தூரில் நடந்தது போல, டாக்டர் ஜெயமோகனுக்கு கோவையில் நடந்தது போல இதுவும் மக்களின் அறியாமையாலும், மனிதத்தன்மையற்ற தனத்தினாலும் நிகழ்ந்த ஒரு வன்மம்.
அதுமட்டுமல்ல நேற்று வன்முறையை நிகழ்த்திய 20 பேர் மீது பல செக்ஷ்ன்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது அதில் நான்கைந்து பேரை தவிர மற்றவர் அனைவருமே கிறிஸ்தவர்கள் கிடையாது.
அப்படி இருக்கும் பொழுது இது போன்ற சில்லறைத்தனமான வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசை வலியுறுத்துகிறேன்.
கீழே கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலை பதிவிடுகிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக