புதன், 22 ஏப்ரல், 2020

ஊரடங்கை தளர்த்த காவல்துறைக்கு ரகசிய ஆணை வந்திருக்கிறதா? ராமதாஸ்

சிவசங்கரன் சுந்தரராசன் :
1) மகாராஷ்டிரா 4,245
2) டெல்லி 1,498
3) குஜராத் 1,949
4) ராஜஸ்தான் 1,404
5)மத்தியப் பிரதேசம் 1,324
6)உத்தரபிரதேசம் 1,179
7) தமிழ்நாடு 943
என தமிழகம் ஆக்டிவ் 7வது நிலையில் ஆக்டிவ் வைரஸ் நிலைகள் உள்ளது. இது விரைவில் மேலும் குறையவே வாய்ப்புகள் மிகவும் அதிகம். இவைகளுக்கு காரணம் தமிழகத்தில் சிறந்த கட்டமைப்புடன் கூடிய மருத்துவமனைகள் தான் ஆகும்.

இவ்வாறு தமிழகம் திராவிடத்தால் வீழ்ந்தோம்  உறவுகளே
நக்கீரன் : சென்னையில் ஊரடங்கை மீறி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு இரு சக்கர வாகனங்களும், மகிழுந்துகளும் விரைகின்றன.
சென்னை என்ன கரோனா காலத்து சுற்றுலா தலமா? ஊரடங்கை மதிக்காவிட்டால் சென்னை இன்னொரு நியூயார்க்காக மாறிவிடும்... எச்சரிக்கை! தமிழகத்தின் 23 ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் சென்னைதான் முதலிடம். 10 மாவட்டங்களின் மொத்த பாதிப்பைவிட அதிகமாக சென்னையில் 303 பேர் பாதித்திருக்கிறார்கள். அதன்பிறகும் பொறுப்பின்றி மக்கள் ஊர் சுற்றினால், அதை காவல்துறை அனுமதித்தால் கரோனாவிடமிருந்து சென்னையை யாராலும் காப்பாற்ற முடியாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக