செவ்வாய், 21 ஏப்ரல், 2020

மத்திய கிழக்கு நாடுகளில் இந்துத்வாவுக்கு கிடைத்த அதிர்ச்சி வைத்தியம்


ஆலஞ்சியார் : திடீர் மாற்றம்.. என்ன திடீரென சங்கிகள் ியலையும் அது இந்திய முஸ்லிம்கள் மீது கொண்டுள்ள கொரூர பகையையும் தொடர்ந்து கவனித்து வந்ததன் வெளிபாடுதான் சமீபத்திய அரபு பிரபுகளின் கடுமையான கண்டனம் .. தொடர்ந்து உயர்பதவியில் இருப்பவர்கள் கூட மோடி இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததும்
தங்களுக்கு வழங்கபட்ட அதிகாரமாக எண்ணி நகையாடியதும் கடைசியில்
ஒருவகை மிரட்டல் லெவலுக்கு வந்ததும் ஆட்சியாளர்களின் பார்வைக்கு கொண்டு செல்லபட்டது .. கீழ்நிலை தொழிலாளர்களிடையே மெல்லிய போக்கு நிலவியதும் அதை கண்டுக்கொள்ளாமல் இருந்ததும் உயர்பதவிகளில் கல்வியாளர்கள் தொழிலதிபர்கள் என முஸ்லிம் விரோத மனப்பான்மை படர தொடங்க விழித்துக்கொண்டு அதன் மூலத்தை ஆராய தொடங்கியதும் அதிர்ச்சியளித்தது ..
இந்திய ஒன்றிய அரசை இயக்கும் ஆர்எஸ்எஸ் இதன் பின்னில் என்ற உண்மை புலப்பட ஆர்எஸ்எஸ் டெரரிஸ்ட் என்ற ஹேஸ்டாக்கோடு
பதிவுகள் வர தொடங்கியதும் உசாரான ஆர்எஸ்எஸ் பிரதமரை கொண்டே ட்விட் எல்லாம் போட செய்தது .. உயர்பதவிகளில் இருந்தவர்கள் உடனடியாக தூக்கபடுவதும் இவர்கள் பதற காரணம்.. வளைகுடா நாடுகளில் வேலைக்கு சென்றவர்களிடம் குறிப்பாக ஆர்எஸ்எஸ் சித்தாந்திகளிடம் ஒருவித அச்சம் வரவும் தங்கள் சமூகவலைத்தள கணக்குகளை எல்லாம் மூடியும் மன்னிப்பு கேட்டும் மறைகிறார்கள் .


அரசின் தூதர் விளக்கம் தந்து நாடுகளிக்கிடையான நல்லுறவை உறுதி செய்கிறார் .. ரிலையன்ஸ் உடனான தொழில்ஒப்பந்தம் செய்த கம்பெனியின் CEO நேரடியாகவே ட்விட் செய்து இந்துத்துவாவை விமர்சிக்கிறார்.. எங்கே ஆர்எஸ்எஸ் பயங்கரவாத இயக்கமென உலக அரங்கில் வலியுறுத்தல் வந்துவிடுமோ என அஞ்சி முஸ்லிம்கள் மீது பாசிச அரசும் பாசிச பார்பனர்களும் தேன் தடவ பார்க்கிறார்கள் ..

மன்னிப்பும் குறுக்குவழியும் அவர்களுக்கு பரம்பரையாகவே பழகியதென்பதால் திடீரென மாற்றத்தை நிகழ்த்த முடிகிறது .. சமூக வலைத்தளங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே தொடர்ந்து நசுக்குவதும் குறிப்பாக பெண்களை தரக்குறைவாக எழுவதும் சமீபகாலமாக அதிகரிக்கிறது விமர்சனம் செய்வதில் தவறில்லை மாறாக அதன் மூலம் அவர்களை நசுக்க நினைப்பது இரண்டாம்தர நிலைக்கு கொண்டு செல்வதும் சரியான அரசியலாக இருக்கமுடியாது
..
இந்திய முஸ்லிம்கள் இந்திய இறையாண்மையில் "பக்தி " கொண்டவர்கள் அடிக்கடி மாறி சிந்திக்கிறவர்களோ தங்களுக்கு இழப்பு வருமென்றால் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறவர்களோ அல்ல.. அடிக்கடி நிறம்மாறும் பச்சோந்திகள் அல்ல.. அவர்களின் நம்பிக்கையில் கொள்கை கோட்பாடிடில் உடன்பாடு இல்லாவிட்டாலும் அவர்களின் நிலைப்பாட்டின் உறுதியை குறைச்சொல்ல முடியாது .. மதம் என்பது அவரவர் தனிவிருப்பம் என்பதை உணரவேண்டும்.. மூட நம்பிக்கைகளையும் சடங்கு சம்பிரதாயம் என்ற பெயரில் மற்றவர்கள் ஏய்த்து பிழைப்பதையும் தொடர்ந்து கண்டிக்கலாம் விமர்ச்சிக்கலாம் ..
ஆனால் பிற மத சமூக மக்களின் மீது வன்மம் கொள்வதும் பிறரை தூண்டி வன்மம் வளர்ப்பதும் அதை அரசு துணையோடு செய்வதும் ஏற்க முடியாது .. வினை எதிர்வினையாற்றுகிறது .. அடிக்கடி நிறம் மாறும் வகையாறாக்கள் வழக்கம் போல் சுருதிமாறாமல் சங்கீதம் பாடுகிறார்கள் .. இந்தமுறை ஒத்தூதுகிறார்கள்

திருந்திவிட்டதைப்போல செய்திகளும் தொடர்ந்து இஸ்லாமிய கரிசனையும் வெளிபடுகிறது.. அரபுலகம் குறிப்பாக தொடர்ந்து இந்துத்துவ அரச

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக