ஞாயிறு, 1 மார்ச், 2020

லக்ஸ்ம்பர்க் அனைத்து பொது போக்குவரத்தும் இலவசம்.... திராவிட பாதையில்?


Devi Somasundaram : லக்ஸ்ம்பர்க் ....
..கிழக்கில் ஜெர்மனியும், வடக்கிலும் மேற்கிலும் பெல்ஜியமும், தெற்கில் பிரான்ஸுமாய் நில வழியாய் வெளி உலகோடு எல்லைகள் தடுக்கப்பட்ட நாடு .
வெறும் 6 லட்சத்தி சொச்சம் மக்கள் தொகை கொண்ட சிறிய ஐரோப்பிய நாடு..ஆனால் உலகின் அதிக வளர்ச்சியடைந்த நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது ( highest per capita income ) ..
மக்களின் அதிக வாங்கும் சக்தி கொண்ட உலகின் இரண்டாவது பணக்கார நாடு.
இப்ப எதுக்கு இதுன்னு கேக்றிங்களா ? .
அந்த நாடு தன் பொது போக்குவரத்தை இலவசமாக்கியுள்ளது.. சில உயர்வகுப்பு மற்றும் இரவு நேர போக்குவரத்து தவிர அனைத்து பயணமும் இலவசம் ..
அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ,பொது போக்குவரத்தை பயன்படுத்த மக்களை தூண்ட இலவச போக்குவரத்தை அறிமுகம் செய்த முதல் நாடு லக்ஸ்ம்பர்க் .
உலகின் பணக்கார வளர்ந்த நாடே இலவசம் தருகின்றது...நம்ம ஊர்ல உணவுக்கே வழி இல்லைன்னு ரேஷன்ல பத்து கிலோ அரிசி குடுத்தா திராவிட ஆட்சிகள் இலவசம் தந்து நாட்டை கெடுத்துடுச்சுன்னு பேசும் ஐடி தொழில் அரைகுறைகள் இப்ப மூஞ்ச எங்க வச்சிக்கும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக