ஞாயிறு, 1 மார்ச், 2020

Yes ..He is my man .. பெரியார்... தேவி சோமசுந்தரம்

Devi Somasundaram : YES, HE IS MY MAN
கருத்தியலாளர்௧ள்,தத்துவவாதிகள் இந்த சமூகத்தை வழி நடத்திகொண்டே இருக்கிறார்கள்.சாக்ரடிஸ்,ப்ளாட்டோ, அரிஸ்டாட்டில்,புத்தர், வள்ளுவர், போன்ற தத்துவவாதிகளாகட்டும்.மார்க்ஸ், ஏங்கல்ஸ், டிராட்ஸ்கி, புருனோ போன்ற கொள்கைவாதிகளாகட்டும் அவர்கள் இந்த மண்ணின் அறியாமை நீக்க அறிவு தந்தவர்கள்.கம்யூனிஸமோ, சோஷலிஸமோ அது மக்களின் நலன் சார்ந்து என்ற அடிப்படையில் உருவான கொள்கைகள்.அப்படி. மக்களின் நலன் கருதி பேசும் கருத்தியலாளர்கள் தாங்கள் நம்பிய வழியினை தான் சரி என்று ஏற்றனர். ஒரு வகையில் அதுவும் நம்பிக்கை சார்ந்தது தான்.
கடவுள் இருக்கார்ன்னு நம்புவதும்,என் கொள்கை தான் சரியான தீர்வுன்னு நம்புவதும் ஒரே மாதிரியான நிலை தான்.
அந்த நம்பிக்கை நிலை கொண்டவர்கள் தங்கள் கருத்துக்கு முரண் படுவதை எதிர்ப்பது மட்டுமில்லாமல் மாற்று வழியையும் சேர்த்தே முரண்படுவார்கள். பிரச்சனைக்கு தீர்வை எதிர்பார்ப்பவர் கிடைக்கின்ற எல்லா வாய்ப்பையும் பயன்படுத்துவார்கள். தன் கருத்தை மட்டும் சரின்னு வாதிடுபவர் பிரச்சனையை தீர்ப்பதற்கு முக்கியத்துவம் தரவில்லை என்றே அர்த்தம்.
அந்த இடத்தில் தான் பெரியார் எல்லாரையும் விட உயர்ந்து நிற்கிறார்.. அவர் தனக்கு தெரிந்த ஒரு வழியை கூறினார்.ஆனா அது மட்டுமே போதும்னு அவர் நினைக்கல.தன் வழி தான் 100% சரின்ற அடமெண்ட் மனநிலை அவர் கிட்ட இல்ல.

கம்யூனிஸத்தை மொழி பெயர்த்து மக்களிடம் கொண்டு சென்றார்,அம்பேத்கரை மொழி பெயர்த்து மக்களிடம் கொண்டு சென்றார்.வள்ளுவனை மக்களிடம் கொண்டு சென்றார்.காரணம் பெரியார் பிரச்சனைக்கு தீர்வ தேடினார்.இந்த மக்கள் எப்படியாவது மீளனும்,அறியாமையில் இருந்து வெளில வரணும்னு விரும்பினார். தன்னை மட்டும் நம்பாம மீள்வதற்கான அனைத்து வாய்ப்பையும் மக்களின் கைகளுக்கு கொண்டு சேர்த்தார்.தன்னை முன்னிலை படுத்தி கொள்ள நினைப்பவர்கள் தன் கருத்த மட்டும் பேசுவார்கள்.மக்கள் ப்ரச்சனை தீர நினைப்பவர்கள் அதற்கான எல்லா வாய்ப்பையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள்.அந்த கிழவன் மக்களுக்கான எந்த வாய்ப்பும் மறுக்கபட்டு விட கூடாதுன்னு நினைச்ச அந்த அதீத மனிதம் தான் அவரை திரும்ப திரும்ப நேசிக்க வைக்கிது .
Yes ..He is my man ..
பெரியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக