ஞாயிறு, 15 மார்ச், 2020

கொள்ளையடிக்கப்படும் தென்னகம் ... அண்ணாவின் ஆரிய மாயை படிக்கவேண்டிய நேரம் வந்து விட்டது .

சுதந்திர இந்தியாவின் ஒவ்வொரு முற்போக்கு நடவடிக்கைகளுக்கும் தென்னகத்து நீதிக்கட்சி திராவிட பாரம்பரியமே மிகபெரிய காரணமாக இருந்திருக்கிறது 
இந்திய தேசிய இனங்களின் முடிவுரையை சத்தம் போடாமல் எழுதிகொண்டிருந்த ஆரிய ஆதிக்கவாதிகளுக்கு இந்திய பெருநிலப்பரப்பில் விழுந்த முதல் அடி . 67 இல் திமுக பெற்ற வெற்றி. 
அதன் பின் வடவர்களின் ஆதிக்க மனகோட்டை மீது அடுத்தடுத்து விழுந்துகொண்டே இருந்த அடிகள் அத்தனையும் வரலாறு இடிகள் ஆகும்.
ஒற்றை இந்தியாவின் கோட்பாட்டில் விழுந்த மரண அடிதான் இந்திக்கு எதிரான திராவிட எழுச்சி முழக்கம் .
வங்காளம் பஞ்சாப் கர்நாடகம் தெலுங்கு மலையாளம்  போன்ற மாநில மொழிகள் எல்லாம் இன்றுவரை மூச்சு விட்டு கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் இந்தி பேசாத  மாநிலங்களில் ஆங்கிலம் தொடர்பு மொழியாக நீடிப்பதால்தான்.
இந்த உரிமையை போராடி பெற்று இந்திய மாநில மொழிகளின் காவாலனாக இருப்பது சந்தேகமே இல்லாமல் திராவிட முன்னேற்ற கழகமும் திராவிட இயக்கங்களும்தான் ..இந்த உரிமை சும்மா கிடைத்து விடவில்ல.
அடியும் இடியும் தாங்கி உயிரையும் இரத்தத்தையும் சேற்றிலும் தெருவிலும் ஆறாக இறைத்து பெற்ற சீதனம் அது .
திராவிடம் வளர்த்த தீயின் வெளிச்சத்தை வெறுமனே எழுதவிட்டு போக முடியாது . சாதாரண முக நூல் பதிவுகளுக்குள் அது அடங்காது.
வடஇந்தியாவின் ஒவ்வொரு இருள் சூழ்ந்த சமுக அவலங்களையும் நன்றாக உணரந்தவர்களுக்கு மட்டுமே புரியும் திராவிடம் என்ன சாதித்தது .. என்னன்ன சாதித்து கொண்டிருக்கிறது என்பது.

ஆரியம் தனது அவலங்களை மறைக்க திராவிடத்தின் வரலாற்றை சாதனையை மறைக்க ஓயாது கைக்கூலிகளையே நம்பி இருக்கிறது.
இமாலயத்தையும் தாண்டி இன்று முழு உலகமும் தென்னகத்தின் கல்வியையும் வளர்ச்சியையும் கண்டு ஜீரணிக்கவே முடியாத திணறல் வடவர்களின் செயலில் தெரிகிறது . 
முற்று முழுதாகவே கொள்ளை அடிக்க தீர்மானித்து விட்டார்கள்.
எல்லா துறைகளிலும் தென்னகத்தை கொள்ளை அடித்தல் மட்டுமே தங்களால் முடிந்தது என்பதை கொஞ்சம் கூட வெட்கம் இன்றி செயல் படுத்துகிறார்கள்.
திராவிடம் கட்டி வைத்த சமூகநீதியின் விழைச்சலை திருட்டு தனமாக அறுவடை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அந்த கயவர்களின் நிறத்திலும் பொய்களிலும் நம்பி தங்கள் இருப்பை தாரை வார்க்கிறார்கள் நம்மவரிலும் சிலர் .. இவர்களை பற்றித்தான் பேரறிஞர் அண்ணா ஆரிய மாயை என்ற நூலில் கூறியுள்ளார்.
திராவிட முன்னேற்ற கழக இளைய தலைமுறையே தற்போது இந்த ஆரிய மாயையில் மூழ்குவது போல தெரிகிறது 
அவர்கள் திராவிட வரலாறு படிக்கவேண்டும் .. இல்லையேல் திராவிடம் அவர்களை படிப்பிக்கும் என்பதை ஒரு எச்சரிக்கையாக எடுத்து கொள்ளவேண்டும்,.
பெரியார் . அண்ணா . கலைஞர்.  பேராசிரியர் .  பட்டுகோட்டை அழகிரி. திருவாரூர் தங்கராசு .  என்று இலகுவில் அடக்கி முடியாத மிகப்பெரிய ஆளுமைகளின் வரலாறு கொண்டது  இந்த தமிழகம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக