திங்கள், 9 மார்ச், 2020

சென்னையில் 10 விமானங்கள் ரத்து .. கொரோனா அச்சம்


தினத்தந்தி : சென்னை . சீனாவின் உகான் மாகாணத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியா உள்ளிட்ட ஏராளமான உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் 39 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சென்னையில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து குவைத், ஹாங்காங் செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்வேஸ், கதே பசுபிக் ஆகிய நிறுவனங்கள் விமானங்களை ரத்து செய்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக