திங்கள், 9 மார்ச், 2020

20 போலி நிறுவனங்கள்.. 2 ஆயிரம் கோடி முதலீடு.. யெஸ் வங்கி நிறுவனர் ராணா

Yes Bank, யெஸ் பேங்க், நிறுவனர், ராணா கபூர், கைது, சோதனை, 600 கோடிtamil.oneindia.com  : மும்பை: யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூரும் அவரது குடும்பத்தினரும் 20 க்கும் மேற்பட்ட ஷெல் (போலியான0 நிறுவனங்களை அமைத்து சொத்துக்களை சட்டவிரோதமாக முதலீடு செய்வதற்கு பயன்படுத்தியதாக, அமலாக்க இயக்குநரகம் (ED) கண்டறிந்துள்ளது.
இந்நிலையில் ரானாவை வரும் 11ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரக்க மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. யெஸ் வங்கி தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. கடனை திருப்பி செலுத்த திறன் இல்லாதவர்கள் மற்ற வங்கிகள் கடன்தர முன்வராத பல நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி கடன் வழங்கியிருக்கிறது.
இதன் காரணமாக வாரா கடன் அதிகரித்துள்ளது. எஸ்ஸார் ஷிப்பிங், மெக்லாய்ட் ரஸ்ஸல். ஐஎல் அண்ட் எஃப்எஸ், ஏடிஏஜி குழும நிறுவனம், காக்ஸ் அண்ட் கிங்ஸ், சிஜி பவர், டிஹெச்எஃப்எல், உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் யெஸ் வங்கி ரூ.10,206 கோடிக்குமேல் கடன் கொடுத்திருக்கிறது. இந்த நிறுவனங்கள் கடனை இன்னமும் திருப்பி செலுத்தவில்லை. இதனால் யெஸ் வங்கியின் வாராக்கடன் கடுமையாக அதிகரித்துள்ளது

தினமலர் :     மும்பை: சர்ச்சையில் சிக்கியுள்ள 'யெஸ் பேங்க்' நிறுவனர் ராணா கபூரை சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கின் கீழ் அமலாக்க துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை கைது செய்தனர். மார்ச் 11 வரை இவரை அமலாக்கத்துறையினர் காவலில் வைத்து விசாரிக்கநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த மோசடியில் ராணா கபூரின் மனைவி மற்றும் மகள்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதால் விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவர்.

வாராக்கடன் நிர்வாகச் சீர்கேடு உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகளில் தனியார் வங்கியான 'யெஸ் பேங்க்' சிக்கியுள்ளது. இதனால் அந்த வங்கி ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வங்கியின் வாடிக்கையாளர் 'அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்கலாம்' என்ற கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

வங்கியின் நிறுவனர் ராணா கபூர் 62 நடவடிக்கைகளை கண்காணித்து வந்த அமலாக்க துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் மும்பையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அப்போது வங்கி பரிவர்த்தனையில் நடந்த முறைகேடு குறித்த முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து மும்பையில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்துக்கு அவரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் போது அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு ராணா கபூர் முறையாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து 20 மணி நேர தொடர் விசாரணைக்குப் பின் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். சட்டவிரோத பணப் பரிமாற்ற மோசடி வழக்கின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதன்பின் காலை 9:00 மணிக்கு மும்பையில் உள்ள புனித ஜார்ஜ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராணா கபூருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இதையடுத்து மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ராணா கபூரை மார்ச் 11 வரை அமலாக்க துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். ராணா கபூரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக அமலாக்க துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ராணா கபூரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் ஆதாரங்கள் குறித்து அமலாக்க துறை வட்டாரங்கள் கூறியதாவது: ராணா கபூர் அவரது மனைவி பிந்து அவரது மூன்று மகள்களும் சேர்ந்து 40 போலி நிறுவனங்களை நேரடியாகவும் மறை முகமாகவும் நிர்வகித்து வந்துள்ளனர். இந்த நிறுவனங்களின் பெயர்களில் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளன.

இந்த நிறுவனங்கள் மூலமாக 2000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு 5000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. 'டேவன் ஹவுசிங் பைனான்ஸ்' என்ற நிறுவனம் யெஸ் பேங்கிடமிருந்து வாங்கிய 3700 கோடி ரூபாய் கடனுக்காக கபூர் குடும்பத்துக்கு 600 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளது. இதுதவிர கபூர் குடும்பத்தினர் ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் இரண்டு சொத்துகளை வாங்கியுள்ளனர். இது குறித்து விசாரணை நடக்கிறது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஓவியங்களையும் கபூர் குடும்பத்தினர் வாங்கியுள்ளனர். இவற்றில் சில ஓவியங்கள் அரசியல் பிரபலங்களிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளன. வாராக்கடன்களை வசூலிக்க யெஸ் பேங்க் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக ராணா கபூரின் மனைவி மற்றும் மகள்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ராணா கபூரின் கைது நடவடிக்கை வங்கித் தொழில் வட்டாரங்களில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக