திங்கள், 9 மார்ச், 2020

ஆர் எஸ் எஸ் ஆதரவும் .. மீம்ஸ் நடிகர்களும்

நல்ல கருத்துள்ள மீம்ஸ் இயற்றுபவர்கள் பல பேர் சினிமா நடிகர்களின் பொருத்தமான படங்களை தேடும் போது அந்த நடிகர்கள் அந்த மீம்சுக்கு எதிரான கருத்துக்களை உடையவர்கள்  ஆக இருப்பது அந்த மீம்சின் கருத்தையே கேலி செய்வது போல அமைந்து விடுகிறது .அதிலும் குறிப்பாக ஆர் எஸ் எஸ் இன் ஆதரவாளர்கள் போன்று செயல்படும்  கமலஹாசன் ரஜினிகாந்த் போன்றோரின் படத்தை போட்டு அவர்ககளுக்கு தொடர்பே இல்லாத கருத்துக்களை  மீம்ஸ்களாக போடுகிறார்கள் .
அதில் ஒரு சந்தேகமும் வருகிறது . ஒரு வேளை இந்த மாதிரி மீம்ஸ் தயாரிப்பவர்கள் வேண்டுமென்றே மக்களிடம் கமலஹாசனையும் ரஜனிகாந்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காக காசு வாங்கி கொண்டுதான் இவற்றை தயாரிக்கிறார்களோ தெரியவில்லை .
 ஆர் எஸ் எஸ் இன் பணம் எங்கும் செல்லும் வல்லமை நிறைந்தது . இந்த மாதிரி மீம்ஸ் தயாரிப்போர்கள் இனியும் ஆர் எஸ் எஸ் சார்பு நடிகர்களின் படத்தை போட்டால் , அதில் கூறப்படும் கருத்துக்கள் உள்நோக்கம் கொண்டவை என்றே கருத வேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக