வியாழன், 6 பிப்ரவரி, 2020

நடிகர் விஜய் ! 38 இடங்கள்; ரூ.300 கோடி ஆவணங்கள்; ரூ.77 கோடி ரொக்கம்!' - வருமான வரித்துறை சொல்வதென்ன? #ITRAID


பிந்தய செய்தி நடிகர் விஜய் வீட்டில் இருந்து எந்த ஆவணமும் கைப்பற்ற படவில்லை!
வருமான வரித்துறை சோதனைvikatan.com - ராம் பிரசாத் : வருமான வரித்துறை சோதனை<! பிரபல நடிகர், படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஃபைனான்ஷியர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இரண்டு நாள்களாக நடக்கும் ரெய்டு, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 22 இடங்களில், நேற்று காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள். வரி ஏய்ப்புப் புகார் காரணமாக இந்தச் சோதனை நடத்தப்படுவதாகக் கூறப்பட்டது. இந்த நிறுவனம் சமீபத்தில் தயாரித்து வெளியிட்ட படம், 'பிகில்'. நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்தப் படம், பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. பிகில் படத் தயாரிப்புக்கு நிதியளித்தது, மதுரையைச் சேர்ந்த ஃபைனான்ஷியர் அன்புச்செழியன். இதனடிப்படையில், நடிகர் விஜய் மற்றும் ஃபைனான்ஷியர் அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் இறங்கினர்.




வருமான வரித்துறை சோதனை




வருமான வரித்துறை சோதனை
ஈ.ஜெ.நந்தகுமார்
அன்புச்செழியனின் மதுரை மற்றும் சென்னை அலுவலகங்கள், வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் இறங்கினர். 'மாஸ்டர்' பட ஷூட்டிங்கில் இருந்த நடிகர் விஜய்-யையும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து சம்மன் அளித்தனர். நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த விஜய், கார் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார். விஜய்-யின் பனையூர் வீட்டில் 18 மணி நேரமாக அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரபல நடிகர், படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஃபைனான்ஷியர் வீடுகள் மற்றும் அலுவகலத்தில் இரண்டு நாள்களாக நடக்கும் ரெய்டு, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






வருமான வரித்துறை ஆணையரும், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் அதிகாரபூர்வ செய்தித்தொடர்பாளருமான சுரபி அலுவாலியா பெயரில் வெளியாகியுள்ள அறிக்கையில், ``தமிழ் திரைப்படத் துறையில் முக்கியமான நபர்களின் இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடந்துவருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த நடிகர், தயாரிப்பாளர், ஃபைனான்ஷியர் மற்றும் விநியோகஸ்தருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இவர்களுக்கு இடையேயான பொதுவான தொடர்பு, பாக்ஸ் ஆபீஸ் வெற்றியுடன் சமீபத்தில் ஈட்டிய ரூ.300 கோடி. சென்னை மற்றும் மதுரையில் இவர்களுக்குச் சொந்தமான 38 இடங்களில் சோதனை நடந்தது.




மதுரையில் சிக்கிய ஆவணங்கள்




மதுரையில் சிக்கிய ஆவணங்கள்
ஈ.ஜெ.நந்தகுமார்
சென்னை மற்றும் மதுரையில், ஃபைனான்ஷியருக்குச் சொந்தமான இடங்களிலிருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி பணத்தைக் கைப்பற்றியுள்ளோம். சொத்து ஆவணங்கள், அடமானப் பத்திரங்கள், காசோலைகள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாங்கள் கண்டறிந்த ஆதாரங்களின் அடிப்படையில், இதன் மதிப்பு 300 கோடியைத் தாண்டும் எனக் கருதுகிறோம். இந்த ஆவணங்கள் அனைத்தும் அவரது நண்பர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.





தயாரிப்பாளருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்துவருகிறது. அவர்கள், படத் தயாரிப்பு மற்றும் விநியோகம், திரையரங்குகள் ஆகியவற்றை நடத்திவருகின்றனர். நிறைய படங்களையும் தயாரித்துள்ளனர். அவர்களது அலுவலகங்களில் சோதனை செய்துவருகிறோம். அவர்களது வரவு-செலவு கணக்குகளை ஆராய்ந்துவருகிறோம்.




நடிகர் விஜய் வீடு




நடிகர் விஜய் வீடு
வி.ஸ்ரீனிவாசுலு
அதேபோல், குறிப்பிட்ட நடிகரைப் பொறுத்தவரையில், அசையா சொத்துகளில் அவர் செய்துள்ள முதலீடு மற்றும் படத்தில் நடித்ததற்காக அந்தத் தயாரிப்பாளரிடமிருந்து அவர் பெற்ற ஊதியம் ஆகியவை குறித்து விசாரித்துவருகிறோம். சில இடங்களில் சோதனையும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக