வியாழன், 20 பிப்ரவரி, 2020

இந்தியன் -2 படப்பிடிப்பில் மூவர் உயிரிழப்பு . கிரேன் சரிந்து விழுந்தது


  தினத்தந்தி : சென்னை, லைகா நிறுவனம் தயாரிப்பில் சங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த திரைப்படத்திற்காக சென்னை அருகே பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன்கள் மூலம் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று செட் அமைக்கும் பணிகள் நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விபத்து ஏற்பட்டதில் உதவி இயக்குனர் மது, சங்கரின் இணை இயக்குனர் கிருஷ்ணா, உதவி நடன இயக்குனர் சந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த காவல்துறையினர், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Jeevan Prasad : இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விழுந்து 3 பேர் பலி
பூந்தமல்லி அடுத்த ஈ.வி.பி பிலிம் சிட்டியில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படத்திற்கான படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் பலி. 10-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர். படப்பிடிப்பு தளத்திற்கு அருகில் உள்ள மருத்துவமனையில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிரேனின் மேல் கட்டப்பட்டிருந்த அதிக எடை கொண்ட ராட்சத லைட் எதிர்பாராத விதமாக சரிந்த விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக