வியாழன், 20 பிப்ரவரி, 2020

திருப்பூரில் லாரி - பேருந்து மோதி ; 20 பேர் உயிரிழப்பு .. பயங்கர விபத்து


தினத்தந்தி : திருப்பூர் மாவட்டம் அவினாசி தேசிய நெடுஞ்சாலையில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் பலியாகினர். திருப்பூர், திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து  திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும், கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரியும் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில், 3 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல்,  சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நரிப்பள்ளம் பகுதியில் சுற்றுலா பேருந்தும் ஆம்னி பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.   < 20-க்கும் மேற்பட்ட பயணிகள்  படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த விபத்தில் பலியானவர்கள் நேபாள நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.&

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக