செவ்வாய், 14 ஜனவரி, 2020

போலி எம் சான்ட் மணல் கடத்தலில் பொன் ராதாகிருஷ்ணனின் பங்கு என்ன? திரு அப்பாவு அதிரடி கேள்விகள் ..

Muralidharan Pb :  இதுக்கு பெயர் தான் வாயைக் கொடுத்து வாங்கிக் கொள்வது.
பழியை முஸ்லிம்கள்  மீதோ, திமுக கூட்டணி மீதோ போட்டு, தப்ப நினைத்த பொன்னாருக்கு பொரி உருண்டையை உருட்டி கொடுத்துள்ளார் அப்பாவு அய்யா.
மூன்று உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
1. பொன்னாருக்கும் இந்த கொலை சம்மந்தமாக ஏதோ ஒரு மர்மம் இருப்பதாக கூறுகிறார்.
2. 500 லாரி M-Sand கடத்துகிறார்கள் பொன்னாரின் பினாமி என்ற உண்மையை விளக்கியுள்ளார்.
3. பொன்னார் எம்பியாக இருந்த போது நிறுவிய சிசிடிவி கேமராக்கள் அவரைப் போலவே டம்மியாக இருந்து உபயோகம் இல்லாமல் இருக்கின்றன என்பதை திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
வாலாட்டினால்,
கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கே ஆப்பு வைக்கும் திமுக, எதிர் திசையில் உள்ள பாஜகவை விட்டு வைக்குமா?
தன் வினை தன்னைச் சுடும் முன்னாள் எம்பி சார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக