செவ்வாய், 14 ஜனவரி, 2020

போகி பண்டிகை.. சென்னையில் அபாய கட்டத்தை எட்டிய காற்று மாசு.. டெல்லியை விட மோசம்?

சொந்த ஊர்கள் எவ்வளோ அளவு tamil.oneindia.com/authors/vishnu-priya. சென்னையில் போகிப்பண்டிகையால் மாசடைந்த காற்று.. வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அவதி - வீடியோ சென்னை: இன்று போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை எரித்ததால் சென்னையில் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பழையன கழிதல் , புதியன புகுதல் என்ற பழமொழிக்கேற்ப, பழைய பாய்கள், துணிகள் உள்ளிட்டவற்றை தீயிட்டு கொளுத்துவது வழக்கம். இன்னும் சிலர் டயர் ஆகியவற்றையும் கொளுத்தி காற்று மாசடைய செய்வர்.
இந்த நிலையில் சென்னையில் காலை முதலே போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வந்தது. அப்போது மக்கள் தேவையில்லாத பொருட்களை எரித்தனர். இதனால் பல இடங்களில் மார்கழி பனிக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு புகை மூட்டமாக இருந்தது.
விமானம் ரத்து அதிகாலை இதனால் காற்று மாசு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மணலியில் 795 குறியீடுகளும், அண்ணாசாலையில் 272 அளவும், வேளச்சேரியில் 100 அளவும் காற்று மாசு பதிவாகியிருந்தது. இதில் மணலியில்தான் அபாயகரமான அளவுக்கு காற்று மாசு சென்றது.

சொந்த ஊர்கள்iiii பொதுவாக காற்று மாசு 50 முதல் 100 வரை இருந்தால் மட்டுமே அந்த காற்றை சுவாசிக்க முடியும். ஆனால் சென்னையில் காற்று மாசால் அதிகாலையில் வாக்கிங் சென்றவர்கள், சொந்த ஊர்களுக்கு செல்வோர் காற்றை சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

 சென்னை- வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை அருகே போகி பண்டிகையையொட்டி புகை மூட்டமாக இருந்ததால் அடுத்தடுத்து 10 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. சென்னை காற்று மாசால் அதிகாலையில் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

விமானம் ரத்துi... இதனால் கொச்சி செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தை சுற்றி பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

 சுற்றுச்சூழல் ஆர்வலர் ....  இந்த காற்று மாசு டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த காற்று மாசை நினைவுப்படுத்தியது. அங்கு தொடர்ந்த காற்று மாசால் மக்கள் ஆக்ஸிஜனை விலைக்கு வாங்கி சுவாசித்ததை யாரும் மறக்க முடியாது. பழைய பொருட்களை இல்லாதவர்களுக்கு கொடுக்காமல் அதை கொளுத்தியதால் காற்று மாசு ஏற்படுத்தியது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக