வெள்ளி, 10 ஜனவரி, 2020

தமிழகத்தில் உள்ள 3000 அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை

தமிழகத்தில் உள்ள 3000 அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைtamil.news18.com ; தமிழகத்திலிருந்து 3000 அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை டெல்லியில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள 3000 அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இலங்கை செல்ல விரும்பிய 3000 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் தினேஷ் குணவர்த்தன கூறியுள்ளார்.
சில மாதங்களில் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்தில் இலங்கை தமிழர்கள் இடம்பெறாததையடுத்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என சட்டமன்றத்தில் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்ட நிலையில், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக