வெள்ளி, 10 ஜனவரி, 2020

திமுக செயல்பாடு கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது- தமிழக காங்கிரஸ் பரபரப்பு அறிக்கை

திமுகதிமுக செயல்பாடு கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது- தமிழக காங்கிரஸ் பரபரப்பு அறிக்கை    மாலைமலர் : ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக திமுக செயல்படுகிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, சட்டமன்ற காங். தவைர் கேஆர். ராமசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. பாராளுமன்றத்தில் கூட்டணி வைத்த கட்சிகளுடன் திமுக களம் இறங்கியது. அதிமுகவை விட அதிக இடங்களை திமுக கைப்பற்றியது. நாளை ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.& இந்நிலையில் தமிழக காங்கிரஸ் சார்பில் திமுகவுக்கு எதிராக ஒரு அறிக்கை வெளியிடப்படுள்ளது. அந்த அறிக்கையில் கூறியதாவது:-
27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சித்தலைவர் பதவி கூட வழங்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார். மாவட்ட அளவில் பேசி முடிவெடுக்க எந்த ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்க வில்லை. 


ஊராட்சித் தலைவர் பதவியோ, துணைத் தலைவர் பதவியோ இதுவரை வழங்கப்படவில்லை. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்துக்கு புறம்பாக திமுக செயல்படுகிறது.
303 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் இதுவரை 2 இடங்கள் மட்டும் திமுகவினால் வழங்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சிகளுக்கு நாளை மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக