புதன், 1 ஜனவரி, 2020

தமிழ் சினிமா 2019 -அனைவருக்கும்-லாபம் தந்த 12 படங்கள் ... பட்டியல்

 தமிழ் சினிமா 2019: அனைவருக்கும்-லாபம்!மின்னம்பலம் : கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் 209 நேரடி தமிழ் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படங்களில் 60 திரைப்படங்கள் 5 கோடி ரூபாய் முதல் 200 கோடி ரூபாய் வரையிலான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டவை.
ஒரு படம் வெளியாவதற்கு முன்பு அனைத்து உரிமைகளும் மினிமம் கியாரண்டி அடிப்படையில் விற்பனையாகி விட்டால் தயாரிப்பாளருக்கு லாபம் என்பது அப்போதே உறுதியாகிவிடும். அந்தப் படத்தை வாங்கி திரையிடுபவர்களுக்கு லாபமா, நஷ்டமா என்பதைப்பற்றி தயாரிப்பாளர்கள் கண்டுகொள்வதில்லை.
< இன்றைய சினிமாவைப் பொறுத்தவரை தயாரிப்பாளர்களிடமிருந்து அப்படம் வெளிவருவதற்கு முன்பு அதில் நடித்த, பணிபுரிந்த அனைவரும் தங்களது சம்பளத்தை வாங்கி விடுகின்றனர். அந்த படம் வெற்றி பெறுமா அல்லது நஷ்டம் வருமா என்பதைப்பற்றி படத்தில் நடித்த நட்சத்திரங்கள் கவலைப்படுவதில்லை.

படத்தின் பட்ஜெட், அதற்கான வட்டி, லாபத்துடன் படத்தை விற்பனை செய்துவிடும் தயாரிப்பாளர், வாங்கியவர்கள் லாபம் அடைந்தார்களா அல்லது நஷ்டம் ஏற்பட்டதா என்பதைப்பற்றி கவலைப்படுவதும் இல்லை, கேட்டுக் கொள்வதும் இல்லை. அதே போன்று மினிமம் கியாரண்டி அடிப்படையில் அல்லது அதிகபட்ச அட்வான்ஸ் கொடுத்து படங்களை திரையிடும் திரையரங்க உரிமையாளர்கள் லாபம் சம்பாதித்தார்களா இல்லை நஷ்டம் ஏற்பட்டதா என்பதைப்பற்றி விநியோகஸ்தர்களும் கவலைப்படுவதில்லை.
சங்கிலித் தொடர் போன்று திரைப்பட வியாபாரத்தில் இருக்கும் இந்த முத்தரப்பு லாபம் அடைந்தால் மட்டுமே அந்த படம் உண்மையில் வணிகரீதியாக, வசூல் ரீதியாக வெற்றிபெற்ற படமாக எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் சினிமா வியாபாரம்,வசூல் இவற்றைப் பற்றி செய்தி வெளியிடும் ஊடகங்கள், மூன்று நாட்களில் 30 கோடி வசூல் என்று கூலிக்கு கூவுகின்ற சமூகவலைதள விமர்சகர்கள், டுவிட்டர் கூலியாட்கள் இதுபோன்ற பகுப்பாய்வை மேற்கொண்டு தகவல்களை வெளியிடுவது இல்லை.
இவற்றிலிருந்து வேறுபட்டு தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர்கள் என முத்தரப்பிடமும் நேரடியாகத் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்ததன் அடிப்படையில் கீழ்க்கண்டவை கடந்த 2019-ஆம் ஆண்டு அனைத்து தரப்புக்கும் லாபம் சம்பாதித்து கொடுத்த படங்களாக உள்ளன.
1. விஸ்வாசம்
2. கைதி
3. தடம்
4. தேவராட்டம்
5. நம்ம வீட்டு பிள்ளை
6. எல் கே ஜி
7. மான்ஸ்டர்
8. காஞ்சனா-3
9. கோமாளி
10. நேர்கொண்ட பார்வை
11. அசுரன்
12. தில்லுக்கு துட்டு
இவை 2019-இல் அனைத்து தரப்பினருக்கும் லாபத்தைப் பெற்றுத்தந்தது.
-இராமானுஜம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக