வியாழன், 7 நவம்பர், 2019

சஞ்சனா டீச்சரின் செல்போன்.. தோண்ட தோண்ட ஆபாச படங்கள்.. அதிர்ந்த சென்னை போலீஸ்!

tamil.oneindia.com-  Hemavandhana  :;சென்னை: "எனக்கு என் காதலன் வேணும்.. அதுக்காகத்தான் என்னிடம் படிக்க வந்த மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து, காதலனுக்கே விருந்தாக்கினேன்" என்று சஞ்சனா டீச்சர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். 
சென்னை தி.நகரை சேர்ந்தவர் சஞ்சனா என்ற 28 வயது பெண் பட்டதாரி, வீட்டிலேயே டியூசன் சென்டர் ஒன்றை நடத்திவருகிறார். இதில், 10,11, 12ம் என 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில், ஒரு மாணவி டியூஷன் முடிந்து வீட்டுக்கு வந்தபோது, அவரது முகம் களைப்புடன் காணப்பட்டது.. ஆடைகள் கலைந்திருந்தது.. முகமெல்லாம் அழுது வீங்கியிருந்தது... அந்த கோலத்தை பார்த்ததுமே பெற்றோர்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. அதனால், மகளிடம் வந்து இதை பற்றி விசாரித்தனர். 
 அப்போது, டியூசன் டீச்சர் சஞ்சனாவும், அவரது ஆண் நண்பர் பாலாஜியும் தன்னை மிரட்டி உடன் படிக்கும் சக மாணவனுடன் பெட் ரூமில் ஒன்றாக இருக்க வைத்து படமும், வீடியோவும் எடுத்ததாக சொல்லி அழுதார். இதைக்கேட்டு அதிர்ந்த பெற்றோர், மாம்பலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் தரவும், சஞ்சனா, ஆண் நண்பர் பாலாஜியை பிடித்து விசாரித்தனர்.
அப்போதுதான், டியூஷன் டீச்சரின் வண்டவாளம் ஒவ்வொன்றாக தெரியவந்தது. அந்த டியூசன் சென்டரிலேயே படுக்கை அறை ஒன்றை இதற்கென ஸ்பெஷலாக ரெடி பண்ணி உள்ளார் சஞ்சனா. அழகாக இருக்கும் மாணவ, மாணவிகளை செலக்ட் செய்து, அவர்களை ஒன்றாக சேர்த்து அந்த பெட்ரூமில் நிர்வாணமாக நிற்க வைத்து டிசைன் டிசைனாக போட்டோக்களை எடுப்பாராம். இதைதவிர, அந்த மாணவ, மாணவிகளை ஒன்றாக இருப்பது போலவும் வீடியோவும் எடுப்பாராம். 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை டீச்சர் இப்படி நிர்வாணமாக வீடியோ, போட்டோ எடுத்தது விசாரணையில் தெரியவந்தது. 
இது எல்லாவற்றிற்கும் மேல், அந்த ஆண் நண்பர் பாலாஜி, மிரட்டி எடுத்த அந்த வீடியோவை காட்டி அதே மாணவிகளை திரும்பவும் மிரட்டி தன்னுடன் உல்லாசமாக இருக்க கட்டாயப்படுத்துவாராம். டீச்சர் மற்றும் பாலாஜியிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ஆய்வு செய்தால், அவ்வளவும் மாணவ, மாணவிகளின் நிர்வாண படங்களும், ஆபாச வீடியோக்களும் இருந்ததை கண்டு அதிர்ந்து போய்விட்டனர். 
இது சம்பந்தமாக சஞ்சனா டீச்சர் போலீசில் சொன்னதாவது: "பாலாஜி என்னை காதலித்து வந்தார். ஆனால் என்ன காரணம்னு தெரியல.. திடீரென என்னை விட்டு ஒதுங்க ஆரம்பித்தார். இதனால் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. என்னால் பாலாஜியை விட்டு இருக்க முடியவில்லை. அந்த பிரிவையும் தாங்க முடியவில்லை. அதனால், என்னை நீ காதலிக்கணும்ன்னா நான் அதுக்கு என்ன செய்யணும்? என்ற பாலாஜியிடம் கேட்டேன். 
அதற்கு என்கிட்ட படிக்கும் மாணவிகளை எனக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும், அவர்களோடு நான் நெருங்கி பழகும் வகையில் அறிமுகப்படுத்தி வைக்கணும் என்று கேட்டார். காதலனின் இந்த டீலுக்கு நானும் சரி என்று சொன்னேன். முதலில் ஒரு மாணவியை, ஈசிஆர் ரோட்டில் உள்ள ஒரு சொகுசு பங்களாவுக்கு நானும் பாலாஜியும் அழைத்து போனாம். அந்த மாணவி, நாங்கள் எங்கோ வெளியில் கூப்பிடுகிறோம் என்று நினைத்து எங்களுடன் வந்துவிட்டாள். 
 அந்த பங்களாவில் மாணவியை பாலாஜி பலாத்காரம் செய்தார்.. அதை வீடியோவும் எடுத்து, அந்த வீடியோவை காட்டி மாணவியிடம் பணம் கேட்டார். இந்த மாதிரி வேறு சில மாணவிகளை ஏமாற்றி, பெட்ரூமுக்கு அழைத்து சென்று, வீடியோ, போட்டோக்களை எடுத்து பணம் பறித்துள்ளார் பாலாஜி. அவர் எந்த வேலைக்கும் போவது இல்லை. என்னை பயன்படுத்திதான் பணத்தை சம்பாதித்தார்" என்றார். 
இப்போது, வன்புணர்ச்சியில் ஈடுபடுதல், பாலியல் வன்கொடுமை, மிரட்டி வழிப்பறி செய்தல், மரண பயத்தை ஏற்படுத்தி பணம் பறித்தல், துன்புறுத்துதல், மிரட்டி அவமதித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது இருவரையும், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். டீச்சரும், காதலனும் ஜெயிலில் உள்ளனர். பாடம் சொல்லி தரும் படித்த பெண்கள், ஆசிரியர்களை நம்பி டியூசனுக்கு அனுப்பினால் இந்த கதியா என்று பெற்றோர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது

/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக