வியாழன், 7 நவம்பர், 2019

பசுமைப் புரட்சியல்ல அது!... உண்மையில், ’’பசுமையை சூறையாடிய சதி?

சாவித்திரி கண்ணன் : புரட்சி வந்து தான் இந்திய மக்களை பட்டினியில் இருந்து காப்பாற்றியது என்ற பச்சைப் பொய்யை ஒட்டு மொத்த
சமூகத்தையும் நம்ம வைத்துவிட்டன! - அரசின் பிரச்சாரங்களும்,அரசு ஆதரவான அதிகாரவர்க்கத்தின் ஊதுகுழலான ஊடகங்களும்!
இல்லை, பசுமைப் புரசியல்ல அது!
உண்மையில், ’’பசுமையை சூறையாடிய சதி’’ என்பதை ஆதாரபூர்வமாக நிருபிப்பதே இந்த நூல்களை நான் எழுதியதன் நோக்கம்!
பசுமைப் புரட்சிக்குப் பிறகு தமிழகத்தில் சுமார் 30 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாகிவிட்டன!
காவேரி டெல்டாவில் 21 லட்சம் ஹெட்டேரில் விளைந்த நெற்பயிர்கள் இன்று 8.5 லட்சம் ஹெட்டேராக சுருங்கிவிட்டது.
இந்தியாவில் ஆண்டுக்கு 500 லட்சம் டன்னுக்கும் அதிகமான ரசாயன உரங்கள் வெளி நாடுகளில் இருந்து, பல ஆயிரம் கோடி செலவில் தருவிக்கப்படுகிறது.
இதன் மூலம் வெளி நாட்டின் நச்சு உரங்களுக்கான சந்தையாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது மட்டுமல்ல, நமது விவசாயமே அன்னிய நாட்டின் தயவில் தான் நடக்க முடியும் என்ற நிலைமை தோன்றியுள்ளது.

நமது சுயசார்பு விவசாயம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகிறது...இன்னும் இப்படி அழிப்பதற்காகவே திட்டங்களும்,சட்டங்களும் உருவாக்கப்படுகின்றன.
இதை தொடர்ந்து உருவானவை தான் நமது ஆரோக்கிய குறைபாடுகள்!
போதாக்குறைக்கு நமது உணவுகலாச்சாரத்தில் திணிக்கப்பட்ட மைதா, டால்டா,வெள்ளைச் சீனி,ரீபைண்ட் ஆயில்,அஜிண மோட்டோ போன்ற ஆபத்தான உணவு பொருட்களும்!
’பைவ் ஸ்டார்’ ஹோட்டல்கள் ஸ்டைலில் இன்று ஊருக்கு ஊரு மருத்துவமனைகள் உருவாகி நம்மை சுரண்டிக் கொழுக்க இன்னும் நாம் இடம் கொடுக்கப் போகிறோமா?
மருந்து,மாத்திரைகள் தேவையில்லாத நமது பழைய உணவு கலாச்சாரத்தை மீட்டெடுக்கப் போகிறோமா? என்பது தான் நம் முன்பு எழுந்துள்ள கேள்வி!
வாய்ப்புள்ளவர்கள் வாருங்கள் இதற்கு விடை தேடுவோம்.
எந்த மதுரை மண்ணில் எந்த தேதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு என் திருமணம் நடந்ததோ, அதே நாளில் (9.11.1994 - 9.11.2019) மாலைப் பொழுதில் நூல்கள் வெளியீடு! நூல் வெளியீட்டிற்கு முன்பான சிறுதானிய சிற்றுண்டி விருந்தை தவறவீடாதீர்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக