ஞாயிறு, 3 நவம்பர், 2019

திமுக கட்டிய மருத்துவ கல்லூரிகளை அதிமுக கணக்கில் சேர்த்த ஆனந்த விகடன் ... ஜால்ரா ..

Muralidharan Pb : புகழ் மிக்க ஆனந்த விகடன் முகநூல் பக்கத்தில் வெளியாகியுள்ள தமிழகத்தில் அதிக மருத்துவ கல்லூரிகள் ஜெயலலிதா அரசால் தான் துவக்கப்பெற்றது என்று பதிவு செய்யப்பட்டுள்ளதே?
இதுதான் உண்மையை மழுங்கடிக்கப்படும் நிலைப்பாடு.
திமுக அரசு, திட்டமிட்டு, நிதி ஒதுக்கி, ஒப்புதல் பெற்று, அடிக்கல் நாட்டி, கட்டி முடிப்பதற்குள் ஆட்சி முடிந்துவிடுகிறது. வழக்கம் போல மக்கள் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அதிமுகவிற்கு வாய்ப்பு வழங்கிட, முடிந்த நிலையில் அடுத்த முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தது தான் மிக அதிகம். ரிப்பன் கட் பண்ணுவதால் மட்டுமே உரிமை கொண்டாட முடியாது.
உதாரணமாக ஜானகி எம்ஜிஆர் சிறிது காலமாக ஆரம்பித்ததை, அம்போவென விட்டுப்போன கவர்னர் ஆட்சியில் தொடராமல் விட்ட பணியை திமுக அரசு ஏற்பட்டவுடன் அனுமதி பெற்று முதல்வர் கலைஞர் தனது கையாலேயே வரைந்த கட்டிட வரைவு தான் தற்போது அரண்மனை போல் நிமிர்ந்து நிற்கும் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம். மீண்டும் ஆட்சி போனதால் அதை முடிக்கும் வாய்ப்பை இழந்தது கலைஞர் அரசு. 1991-1996 ஆட்சியில் தன்னை அரசியலுக்கு அழைத்து வந்தவர் எம்ஜிஆர் என்ற நன்றிங்கு கூட அக்கட்டிட பணியை முடிக்காமல் பின் ஏற்பட்ட திமுக ஆட்சியில் கலைஞர் முதல்வரானதும் அப்போதைய துணை குடியரசுத் தலைவர் கிருஷ்ணகாந்த அவர்களை வைத்து திறந்தவர் கலைஞர்.
இதுதான் கலைஞர், அவரைப் புரிந்துகொண்ட ஆனந்த விகடன் இதை எழுத மறுப்பது இங்கிருக்கும் தமிழக மக்களின் சாபக்கேடு.
கலைஞருக்கு நிகர் அவர் மட்டும். நடுநிலையோடு அவரைப் படித்தால் மட்டும் உண்மை விளங்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக