ஞாயிறு, 3 நவம்பர், 2019

அரசு மருத்துவர்களின் அவலங்கள் .. யாரும் பேசுவதில்லை ..

Dr.ஃபரூக் அப்துல்லா  : அரசு மருத்துவர்கள் white collar job என்று நினைக்கிறீர்களா?
தினமும் OP முடிக்கும் போது
வியர்வை வந்து தொப்பென்று நனைந்திருக்கும் சட்டை.

யூரின் போகாமல் அடக்கி வைத்தது அப்போது தான் நினைவு வரும்.
நா வரண்டு போயிருக்கும்.
குடிப்பதற்காக வைக்கப்பட்ட டீ என்ற பானகம் கூட சூடு இல்லாமல் குளிர்ந்திருக்கும் . பெருங்கூட்டம் அறையின் காற்றோட்டத்தை அடைத்து நிற்பதால் சரியாக காற்று கூட வராது.
மூச்சு அடைக்கும்.
நாங்கள் சந்திப்பது ஏழை எளியவர்கள்.
ஏழைகள் என்றால் வாய் அளவில் இல்லை.
நிஜமான ஏழைகள்.
பத்து நாள் ஒரே வேட்டியை / ஒரே சேலையை அணிந்து இருப்பார்கள்.
மாற்று வேட்டி இருக்காது.
அந்த அறையில் ஒருவித துர்நாற்றம் அடிக்கும் ஐயா.
அதையும் பொறுத்து தான் வேலை செய்வோம்.
மது அருந்தி விட்டு அங்கு வந்து வாந்தி எடுப்பார்கள்
மேலும் மது போதையில் நேரே வந்து பேசுவார்கள்
நாறும் ஐயா.. நேரே முகத்துக்கு வந்து இருமிக்காட்டுவார்கள்.
அந்த இருமலில் காச நோய் கிருமி இருந்தால் அதையும் பரிசாக பெற வேண்டும் ஐயா..
நடுவே பிரசவ வார்டிற்கு சென்று பிரசவம் பார்க்க வேண்டும்.
அப்போது பனிக்குடம் உடைந்தாலோ கர்ப்பிணி சிறுநீர் கழித்தாலோ முகம் மற்றும் உடல் முழுவதும் தெளிக்கும்.
குழந்தை பிறப்பு தான் கண்முன்னே கண்முன்னே இருக்குமே தவிர.. இந்த சிறுநீர் பட்டது பற்றி நினைவில் கூட இருக்காது.
ஏழைகளை நாதியற்றவர்களை புத்தகங்களில் படிப்பது வேறு
அவர்களை தினமும் நேரில் சந்திப்பது வேறு.
இது அனைத்தையும் ஏற்று தான் நாங்கள் வேலை செய்கிறோம்
அரசு மருத்துவர்களைப் பற்றி தவறான கருத்துகளை பதிவு செய்யும் நண்பர்கள் / சொந்தங்கள் அவர்களின் உண்மை நிலையை பற்றி கூறினால் அவ்வாறு செய்ய யோசிப்பார்கள்
நிச்சயம் யோசிப்பார்கள்..
—————
*Dr.ஃபரூக் அப்துல்லா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக